தொடர்ந்து ஏறுமுகத்தில் பங்குச்சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகளில் ஜூலை 4ஆம் தேதியான வியாழக்கிழமை புதிய உச்சம் தொட்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்62 புள்ளிகள் உயர்ந்து 80,049 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 15 புள்ளிகள் உயர்ந்து 24,302 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. மருந்துத்துறை பங்குகள் 1.4% ஏற்றமும், தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் துறை பங்குகளும் தலா 0.9% உயர்வை கண்டன. ஊடகத்துறை பங்குகள் 0.5% சரிவை கண்டன. நிதிசேவைகள், FMCG துறை பங்குகள் 0.2%சரிவை கண்டன. சென்னையில் ஜூலை 4 ஆம் தேதி வியாழக்கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 80ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 6760 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் 50 காசுகள் விலை உயர்ந்து 97 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோஆயிரத்து 500ரூபாய் உயர்ந்து 97ஆயிரத்து 500 ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்.