சேவை தர விதிகளில் லேசான தளர்வு: டிராய்
இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அண்மையில் தனது விதிகளில் லேசான தளர்வு அளிக்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகக் கடுமையான விதிகளால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தொலை தொடர்பு நிறுவனங்கள் வருந்திய நிலையில் விதிகளில் லேசான மாற்றம் நிகழ்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். அதே நேரம் செல்போன் சிம்கார்டு சேவை வழங்கும் நிறுவனங்கள் தரத்தில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது என்று டிராய் கேட்டுக்கொண்யுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் இதற்கான புதிய விதியை டிராய் வெளியிட இருக்கிறது. பேசிக்கொண்டிருக்கும்போதே நெட்வொர்க் கட் ஆகும் செயலுக்கு கால் டிராப் என்று பெயர். இதனை குறைக்க வேண்டும் என்று கடந்தாண்டு ஆகஸ்ட்டில் டிராய் புதிய உத்தரவுகளை பிறப்பித்து நெருக்கடி அளித்தது. மாதந்தோறும் சேவைகளின் நிலை, கால் டிராப் குறைப்பதற்கான வழிகாட்டுதல்கள், காத்திருப்பு நேரம் குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை டிராய் மற்றும் தொலைதொடர்பு நிறுவன பிரிதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. செல்போன் சிக்னல்கள் துண்டிக்கப்படாமல் இயக்கவும், அதே நேரம் அகண்ட அலைவரிசை சேவையில் காத்திருப்பு நேரமும் இருக்கக் கூடாது என்றும் இந்த கூட்டத்தில் டிராய் தரப்பில் கூறப்பட்டுள்ளது., மாதந்தோறும் புள்ளிவிவரங்களை தரச் சொல்வதற்கு தொலை தொடர்பு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுவரை 3 மாதங்களுக்கு ஒறு முறைதான் வாடிக்கையாளர்கள் தரவுகளை மத்திய அரசுக்கு நிறுவனங்கள் அளித்து வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒவ்வொரு மாதிரியான விதிகள் இருப்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.