தரவுகள் திருட்டா நோ நோ சொல்கிறது ஏர்டெல்..
இந்தியாவில் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக திகழ்கிறது பார்தி ஏர்டெல் நிறுவனம், அண்மையில் இந்த நிறுவனத்தின் தரவுகள் கசிந்துவிட்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் தங்கள் நிறுவன தரவுகள் எங்கும் கசியவில்லையே என்று பார்தி ஏர்டெல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில்சிலர் இந்த தகவலை பரப்பியுள்ளதாகவும் ஏர்டெல் நிறுவனம் மறுப்பு அறிக்கையில் கூறியுள்ளது. அண்மையில் வெளியான தகவலின்படி, 37கோடியே 50 லட்சம் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களி்ன் தரவுகள் இணையத்தில் விற்பனைக்கு உள்ளதாக கூறப்பட்டது. அதிலும் குறிப்பாக வாடிக்கையாளரின் பெயர்,முகவரி,ஆதார் எண் உள்ளிட்டவை கசிந்ததாக தகவல் பரவியது. அதுவும் மொத்த தகவல்களையும் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. எனினும் முழுமையான விசாரணைக்கும்,ஆய்வுக்கும் பிறகே எந்த தரவுகளும் திருடப்படவில்லை என்பதை ஏர்டெல் நிறுவனம் உறுதிசெய்துள்ளது.