ஹல்திராம்ஸை கட்டுப்படுத்தும் பிளாக்ஸ்டோன்..
இந்தியாவில் ஸ்னாக்ஸ் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் ஹல்திராம்ஸ் நிறுவனத்தின் பங்குகளை 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிளாக்ஸ்டோன் நிறுவனம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாம்பி ளாக்ஸ்டோனும் அபுதாபி முதலீட்டு நிறுவனமும் சிங்கப்பூர் ஜிஐசி நிறுவனமும் இணைந்து இந்த பங்குகளை வாங்க இருக்கின்றனராம். டெல்லி மற்றும் நாக்பூரில் இருந்து இயங்கும் அகர்வால் குழுமம் இந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். தற்போது செல்வதைப்போல இருந்தால் ஹல்திராம்ஸ் நிறுவனத்தின் 76 விழுக்காடு பங்குகளை பிளாக்ஸ்டோன் கூட்டணி வாங்க இருக்கிறது. 8.5 பில்லியன் டாலர் வரை தனியார் முதலீடுகள் செய்ய முன்வந்துள்ள நிலையில் அந்த குடும்பத்தினர் தாங்களாகவே நிறுவனத்தை மேம்படுத்த முடியும் என்று மறுப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும் 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வந்தால் வேண்டுமானால் விற்றுவிடும் நிலையில் அகர்வால் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிளாக்ஸ்டோன் மட்டுமின்றி டெமாசெக் ஹோல்டிங்க்ஸ் நிறுவனமும் ஹல்திராம்ஸை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. டெல்லியில் உள்ள அகர்வால் குடும்பத்தினருக்கு 56 விழுக்காடு பங்கும், நாக்பூரில் உள்ள குடும்பத்தினருக்கு 44 விழுக்காடு பங்குகளும் உள்ளன. ஹல்திராம்ஸ் நிறுவனத்தின் டெல்லி பிரிவில் ஆண்டு வருவாய் 6,377 கோடி ரூபாயாக இருக்கிறது. இதில் கடந்த 23 நிதியாண்டில் மட்டும் லாபமாக 593 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. நாக்பூர் கிளையில் ஹல்திராம்ஸ் நிறுவனத்தின் வருவாய் 5,974 கோடி ரூபாயாக உள்ளது. இதில் லாபம் மட்டும் 794 கோடி ரூபாயாக 2023 நிதியாண்டில் இருந்துள்ளது.