ஒரு நைட் ஹோட்டல்ல தங்க 1 லட்சம் ரூபாயாம்..
ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி-ராதிகாமெர்ச்சன்ட் திருமணம் வரும் 12 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான விழாக்கள் இப்போதே நடந்து வருகின்றன. இந்நிலையில் பாந்தரா குர்லா காம்பிளக்சில் உள்ள அனைத்து வீடுகளும் விற்றுத்தீர்ந்துவிட்டன. இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருவார்கள் என்பதால் வீடுகள், நட்சத்திர ஹோட்டல்களில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஜூலை 14 ஆம் தேதி அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு இரவுக்கு 91,350 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இங்கு தங்க ஒரு இரவுக்கு 13,000 ரூபாய் மட்டுமே ஆகும். கடந்த 5 ஆம் தேதி நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் பிரபல பாடகர் ஜஸ்டின் பெய்பர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வரும் 12 முதல் 14 ஆம் தேதி வரை திருமணத்தின் பிரதான நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இதில் பங்கேற்க உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அம்பானி இல்லத் திருமணத்துக்காக மும்பையில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது மும்பையில் உள்ள பெரும்பாலான 5 நட்சத்திர ஹோட்டல்களில் ரூம்கள் விற்றுத்தீர்ந்துவிட்டன.