பேடிஎமுக்கு தொழிலாளர் அமைச்சகம் நோட்டீஸ்
பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அண்மையில் பல ஊழியர்களை வேலையைவிட்டு தூக்கியது. இதற்கு விளக்கம் கேட்டு பெங்களூருவில் உள்ள வட்டார தொழிலாளர் ஆணையர் நோட்டீஸ் அளித்துள்ளார். அதில் பேடிஎம் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களை எப்படி பணிநீக்கினீர்கள் என்றும், இது விதிமீறல் என்றும், முறையான பணம் தராமல் பணியாளர்கள் வேலையைவிட்டு நீக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் விதிமீறிய புகாரில் பேடிஎம் பேமண்ட் வங்கியை ரிசர்வ் வங்கி முடக்கியது. இதன் எதிரொலியாக பல பேரை பேடிஎம் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளது. அனைத்து சாதகமான வாய்ப்புகளையும் பரிசீலித்த பிறகே பணியாளர்களை உரிய விதிகளுக்கு உட்படுத்தி வெளியேற்றியதாக பேடிஎம் நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது. வெளிப்படைத்தன்மையையும் உறுதிபடுத்தியுள்ளதாக அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை வெளியேற்றப்பட்ட ஊழியர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.