பாகிஸ்தானில் பிச்சை பிஸ்னஸ்..
நிதி சிக்கலில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தான் பிறநாட்டு உதவியை கையேந்தி நிற்கிறது. இது பற்றி அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அண்மையில் பேசியுள்ளார். அதில் நமது நட்பு நாடுகளிடம் சாதாரணமாக போனில் பேசினால் கூட நாம் பணம் கேட்கத்தான் போன் செய்திருக்கிறோம் என்ற தவறான எண்ணம் உருவாகியுள்ளது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு வந்து பிச்சை எடுக்க முயன்ற 2 ஆயிரம் பேரின் பாஸ்போர்ட்டை முடக்கியிருப்பதாகவும் ஷெரீப் கூறினார். மேலும் பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்கு பிச்சையெடுக்க அனுப்பும் முகவர்களையும் கண்டறிய ஆணையிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று பிச்சையெடுப்பதுநாட்டின் பெயரை கெடுக்கும் வகையில் அமையும் என்பதால் கடுமையான நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. பிச்சை எடுப்பதற்காக மக்களை கடத்தும் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்றத்திலேயே பேசப்பட்டதால் பரபரப்பு நிலவியது ஆன்மிக விசா பெற்று விட்டு சவுதி அரேபியா, ஈரான், ஈராக்குக்கு சென்று அங்கு சிலர் பிச்சையெடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் பிச்சையெடுத்து கைதான 90 விழுக்காடு பேர் பாகிஸ்தானியர்கள் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் , ஹராம் பகுதியில் பிக் பாக்கெட் அடிப்பதில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் என்றும், அவர்களின் அடுத்தகட்ட நகர்வு தற்போது ஜப்பானுக்கு மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.