மோசடிகளை தவிர்க்க ஆப்பிள் கூறும் வழிகள்..
பிரபல ஆப்பிள் நிறுவனம், தனது நிறுவன பொருட்களில் மோசடிகளை தடுப்பது எப்படி என்பது பற்றி விரிவான விளக்கத்தை அளித்துள்ளது. மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகள், மற்றும் மற்ற மெசேஜ்கள் வாயிலாக மோசடி தகவல்கள் குறித்து எப்படி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. SMS மற்றும் மின்னஞ்சல் வாயிலாக போலியான தரவுகளை அளிப்பதும், உண்மைக்கு புறம்பான தகவல்களை உங்கள் கம்பியூட்டர் சிக்கலில் இருக்கிறது என்றும் மோசடி நபர்கள் அனுகுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது சம்பந்தமே இல்லாத தொலைபேசி அழைப்புகள், இலவசமாக பரிசுப் பொருட்கள் தருகிறோம் என்று விளம்பரம் செய்வது உள்ளிட்ட அம்சங்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது சரி இதையெல்லாம் தடுக்க அப்படி என்னதான் வழி? பாஸ்வேர்டுகள், பாதுகாப்பு கோடுகள் உள்ளிட்டவற்றை எங்கும் பகிர வேண்டாம். 2 ஃபேக்டர் சரிபார்த்தலை பயன்படுத்த வேண்டும், ஆப்பிள் கிஃப்ட் கார்டுகளைமற்ற எந்த பேமண்ட்டுக்கும் பயன்படுத்த வேண்டாம். பாதுகாப்பான இடத்தில் இருந்தே மென்பொருட்களை பதிவிறக்குவது நல்லது. உங்களுக்கு தொடர்பு இல்லாத எந்த லிங்குகளையும் தொட வேண்டாம்தெரியாத நபர்களின் தொலைபேசி அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும் ஆப்பிள் எச்சரித்துள்ளது