பஞ்சாயத்து செய்த தொழிலாளர் அமைச்சகம்..
பேடிஎம் நிறுவனத்தில் இருந்து காரணமின்றி நீக்கப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட பணியாளர் தொழிலாளர் நல அமைச்சகத்தில் புகார் அளித்த நிலையில் அவருக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்கே ஸ்பான்சர் செய்யும் அளவுக்கு பணம் வைத்திருந்த பேடிஎம் நிறுவனம் படிப்படியாக திவாலாகிக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் அண்மையில் ரிசர்வ் வங்கியின் உத்தரவை அடுத்து பேடிஎம் பேமண்ட் வங்கியின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மீது பெங்களூருவில் அளிக்கப்பட்ட புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டது. நேற்று பேடிஎம் நிறுவனம் சார்பில் வட்டார தொழிலாளர் அலுவலக்ததில் அதிகாரி ஒருவர் சென்றார்.அப்போது புகார் குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது தங்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் ஊழியர்களுக்கு மாற்றுப்பணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்துகொண்டுதான் இருப்பதாகவும் கூறப்பட்டது. எனினும் தொழிலாளர்கள் தரப்பில் பேடிஎம் மீது சரமாரி புகார்கள் அளிக்கப்பட்டன. போதுமான பணம் தந்து வேலையை விட்டு நீக்க வில்லை என்றும், உரிய அவகாசம் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.