வெளிநாடுகளிலும் கணக்கு தொடங்கலாம்
வெளிநாட்டு பணத்தின் கணக்குகளுக்கு Fca என்று ஆங்கிலத்தில் பெயர் உள்ளது. இந்த நிலையில் கிஃப்ட் சிட்டி விதிப்படி இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் FCA கணக்கு தொடங்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. LRS எனப்படும் விதிகளுக்கு உட்பட்டு IFSCS மையங்களில் இந்த கணக்குகளை தொடங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுப்பொருட்கள் அனுப்புவது, வெளிநாட்டில் இடம் வாங்குவது, காப்பீடு, கல்விக்கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட சலுகைகளை பயன்படுத்தவும் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பன்னாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு இதற்கென பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட சட்டத்தையும் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இதுவரை LRS முறைப்படி வெளிநாடுகளில் சொத்துகள் வாங்குவது,வெளிநாடுகளில் முதலீடு செய்வது, நன்கொடைகள், வெளிநாட்டில் உள்ள உறவினரின் செலவுகளுக்கும், வெளிநாட்டு கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்கும் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டு வந்தன. இனி FCA வந்துவிட்டதால் மேலும் பல சேவைகளை வெளிநாடு வாழ் இந்தயர்கள பாதுகாப்பாக பயன்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.