ஜியோ ஐபிஓ இவ்வளவா?
ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு சிறிய பிரிவான ஜியோ நிறுவனம் விரைவில் ஆரம்ப பங்கு வெளியீடுக்கு தயாராகி வருகிறது. 2025-ல் இந்த ஐபிஓ வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 9லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்த நிதியை திரட்ட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒரு பங்கின் விலை 3580 ரூபாயாக உள்ள போதும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகளை வாங்கலாம் என்று பங்குச்சந்தை தரகு நிறுவனங்கள் பரிந்துரைக்கின்றனர். கடந்த ஜனவரியில் இருந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்கு விலை 22 விழுக்காடு அதிகரித்துள்ளது. தேசிய பங்குச்சந்தையில் இந்நிறுவனம் 12 விழுக்காடு எழுச்சி கண்டுள்ளது. ஜியோ நிறுவனத்தின் ஆரம்ப பங்கு வெளியீடு சந்தைக்கு வந்தால் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அதிகளவில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஆகஸ்ட்டில் ஜியோ ஃபினான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள் வெளியிடப்பட்டது. அண்மையில்தான் ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் பிளான்களை உயர்த்தியுள்ளது. இந்த விலையேற்றம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க உதவும் என்று நிறுவனம் நம்புவதாக ஜெஃப்ரீஸ் என்ற நிறுவனம் தெரிவிக்கிறது. ஜியோவைத் தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களும் தங்கள் சந்தாவை உயர்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.