வங்கி அதிகாரிகளை எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி…
இந்தியாவில் உள்ள வணிக ரீதியிலான வங்கிகளின் தணிக்கையாளர்கள், மூத்த நிதி அதிகாரிகளுடன் ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் அண்ணையில் ஒரு கூட்டம் நடத்தினர். அதில் ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இணை ஆளுநர்கள் ராஜேஷ்வர் ராவ் மற்றும் ஜே.சாமிநாதன் ஆகியோர் இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் சார்பில் பங்கேற்றனர். வங்கிகளின் பேலன்ஸ் ஷீட் மற்றும் வங்கியின் நிதி நிலை இரண்டும் சரியாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. நம்பிக்கை எப்போதும் பற்றாக்குறையாகவே இருப்பதாகவும், வங்கிகள் மற்றும் வெளியில் இருந்து தணிக்கை செய்யும் கணக்கு தணிக்கை அதிகாரிகளுக்கும் மத்தியில் ஒரு மோதல் போக்கு இருந்துகொண்டே இருப்பதாகவும், வருமானம் மற்றும் லோன்கள் தொடர்பான விஷயங்களில் இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் இருப்பதாகவும் மூத்த வங்கி அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். கடன் மற்றும் டெபாசிட் இடையே இடைவெளி பெரிதாகிக்கொண்டே வரும் இந்த நிலையில் வங்கி நிர்வாகிகள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகளுடன் இந்த கூட்டமானது நடத்தப்பட்டது. ஜூன் மாத காலாண்டு தரவுகளின்படி, சில வங்கிகளின் கடன் விகிதம் 15 முதல் 16 விழுக்காடாக இருப்பதாகவும், அதே நேரம் டெபாசிட் அளவு 9 முதல் 12 விழுக்காடாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தேவையில்லாத ரிஸ்குகளை எடுக்க வேண்டாம் என்று அண்மையில் சக்தி காந்ததாஸ் கூறியிருந்த நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் கோடக் வங்கி, மார்ச் மாதத்தில் ஐஐஎப்எல் நிதி நிறுவனம் மற்ரும் ஜே எம்ப பைனான்சியல் ஆகிய நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தது. முன்னதாக பேடிஎம் பேமண்ட் வங்கிகளையும் டெபாசிட்களை காலி செய்யவும் ரிசர்வ் வங்கி அறிவுருத்தியிருந்தது. ரிஸ்க்குகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் ரிஸ்குகளை கையாளுவதில் உள்ள நிர்வாகம் குறித்து மூத்த வங்கி அதிகாரிகளுக்கும் அண்மையில் ரிசர்வ் வங்கி அறிவுரைகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.