ஆகஸ்ட் 1க்கு பிறகு இதெல்லாம் ஏற்க முடியாது..
வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு பிறகு அதானி பவர், எஸ் பேக், டாடா இன்வெஸ்ட்மென்ட், பேடிஎம் உல்ளிட்ட ஆயிரத்து 10 பங்குகளை சொத்துகளாக கணக்கில் எடுத்துக்கொள்ள இயலாது என்று தேசிய பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தேசிய பங்குச்சந்தையின் விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில் தேசிய பங்குச்சந்தையால் வகைபடுத்தப்பட்ட சில பங்குகளை கொலேட்ரல் எனப்படும் சொத்துகளாக கருத முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் இந்த ஆயிரம் பங்குகள் ஆர்டர் மதிப்பு 1 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் தேசிய பங்குச்சந்தை தெரிவித்துள்ளது. ஏற்கனவே வரிசையில் காத்திருக்கும் ஒப்புதல் அளிக்கப்படாத பங்குகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் இந்த திட்டம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்குகள் வெட்டுவதால் புதிய பங்குகள் சந்தையில் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி செய்யும் நடைமுறைக்கு ஹேர்கட் என்று பெயர். இந்த ஹேர்கட் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதாவது வேல்யூ அட் ரிஸ்க் எனப்படும் பங்குகள் அல்லது 40 விழுக்காடு பங்குகளில் எது தேவையோ அதில் இந்த நடவடிக்கையை தேசிய பங்குச்சந்தை செய்யும். வரும் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து இந்த விகிதம் 60விழுக்காடாகவும், அக்டோபரில் இருந்து 80 விழுக்காடாகவும், நவம்பரில் இருந்து 100விழுக்காடாகவும் மாற்றப்படும் என்கிறது அந்த வட்டாரங்கள். ஜூப்பிட்டர் வேகான்ஸ், கியோசிஎல், ஜோதி சின்சி ஆட்டோமேஷன், ஜேபிஎம் ஆட்டோ, ஹாட்சன் ஆக்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சொத்துகளாக மதிக்கப்படாத பட்டியலில் இடம்பிடித்த மற்ற நிறுவனங்களாகும்.