2 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இசைவு..
பிரபல ஊடக நிறுவனமான ஜீ எண்டர்டெயின்மென்ட் அண்மையில் பங்குதாரர்களின் ஒப்புதலை பெற்றுள்ளது. 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியை பெறுவதற்காகத்தான் இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக பங்குதாரர்களிடம் ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வாக்கெடுப்பை நடத்தியது. இதில் 78.83விழுக்காடு மக்கள் சம்மதம் தெரிவித்தனர். மீதம் 21.16 விழுக்காடு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திங்கட்கிழமை பங்குச்சந்தை நிலவரப்படி ஜி நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரு பங்கு 160ரூபாய் 34 பைசாவாக உள்ளது. இது 4 விழுக்காடு அதிகமாகும். சோனியுடன் இணைய இருப்பதாக கடந்தாண்டு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி, கடைசியில் புஸ்க் என போனதால் ஜீ நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் டமாலாகிவிட்டது. 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட டீல் நீண்ட இழுவைக்கு பிறகு தோல்வியில் முடிந்தது. கடந்த ஜனவரி 22-ல் ஜீயுடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜீ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த அபய் ஓஜா கடந்த மே மாதத்தில் பதவியில் இருந்து தூக்கப்பட்டார். அவரை பதவி நீக்கியதற்கான எந்த வலுவான காரணமும் கூறப்படவில்லை. இந்நிலையில் ஜி நிறுவனம் தற்போது 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவெடுத்திருப்பது சந்தையில் பேசுபொருளாகியுள்ளது.