வரலாறு காணாத உச்சத்தில் முடிந்த சந்தைகள்
இந்தியப்பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத புதிய உச்சத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 626 புள்ளிகள் உயர்ந்து 81ஆயிரத்து 343 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 187 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 800 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவுற்றது TCS, LTIMindtree, ONGC, Bajaj Finserv, Wiproஉள்ளிட்ட பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன. Asian Paints, Hero MotoCorp, Grasim, Coal India, Bajaj Auto நிறுவன பங்குகள் பெரிதாக வீழ்ந்தன. வங்கிகள், ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம், FMCG,டெலிகாம் துறை பங்குகள் 0.3 முதல் 2விழுக்காடு வரை விலை உயர்ந்து முடிந்தன. உலோகம், ஆற்றல் மற்றும் ஊடகத்துறை பங்குகள் 1 முதல் 3.5 விழுக்காடு விலை சரிந்து முடிந்தன. சென்னையில் ஜூலை 18 ஆம் தேதி வியாழக் கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து விற்பனையானது. 55 ஆயிரத்து 240 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 6905 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் 30 காசுகள் விலை சரிந்து 99 ரூபாய் 20 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோஆயிரத்து 300ரூபாய் குறைந்து 99ஆயிரத்து200 ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்.