தட்டித்தூக்கிய டாடா நிறுவனம்
உலகின் முன்னணி பேட்டரி தயாரிப்பு நிறுவனத்துக்கு பேட்டரி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செய்யும் பெரிய ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளது. 2025 நிதியாண்டின் முதல் காலாண்டின் முடிவுகளை வெளியிட்ட அந்நிறுவனம் உலகின் எந்த நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிடவில்லை. அண்மையில்தான் டாடா டெக்னாலஜீஸ் நிறுவனம், டாடா குழுமத்தின் செல் தயாரிப்பு நிறுவனமான அக்ரடாசுடன் கடந்த ஜனவரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. டாடா டெக்னாலஜீஸ் நிறுவனம் கடந்த காலாண்டில் 1269 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 0.9 விழுக்காடு அதிகமாகும். சேவைத்துறையின் வருவாய் 1 விழுக்காடு குறைந்து 985 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. தற்போது வரை டாடா டெக்னாலஜீஸ் நிறுவனம் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் 2 மின்சார வாகன திட்டத்தில் பணியாற்றி வருவதாக கூறியுள்ளது. வடக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வணிக பயன்பாட்டு வாகனத்தின் கேபின் வடிவமைப்பு உரிமையை டாடா குழுமம் பெற்றுள்ளது. ஐரோப்பாவின் சொகுசு ஆட்டோமொபைல் நிறுவனமும் டாடா டெக்னாலஜீஸை தேர்ந்தெடுத்து கிளவுடு அடிப்படையிலான இயங்குதள சூழலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிகர வருவாய் மார்ஜின் 12.8 விழுக்காடு உயர்வை சந்தித்துள்ளது.