சென்னையில் மேலும் முதலீடு செய்ய கோத்ரேஜ் பாய்ஸ் திட்டம்..
பிரிபல கோத்ரேஜ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கோத்ரேஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனம் சென்னையின் புறநகர் பகுதியில் 400 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. கோத்ரேஜ் நிறுவனம் தற்போது தமிழ்நாட்டில் பேலட்டுகள் மற்றும் தகர ஷெல்ப்புகள் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம், அடுத்ததாக 20 ஆண்டுகளுக்கு தேவையான முதலீடுகளை பல கட்டங்களாக செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. தற்போது அம்பத்தூரில் 27 ஏக்கரில் உள்ள இடம் ஆண்டுக்கு 90 ஆயிரம் டன் அளவுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் இயங்கி வருகிறது. அடுத்த 18 மாதங்களுக்கு இயங்கும் வகையில் பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதே அளவுள்ள இடத்தை கோத்ரேஜ் நிறுவனம் தேடி வருகிறது. 350 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2027-28 நிதியாண்டில் 500 கோடி ரூபாய் டர்ன் ஓவர் நடக்கும் வகையில் பணிகள் நடப்பதாகவும், அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் மொத்த வளர்ச்சி 1,600 கோடி ரூபாயாக உயர்த்த திட்டம் உள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் செயல் துணைத்தலைவர் விகாஸ் சவுதாபா தெரிவித்துள்ளார்.