புதிய உத்தியை கையில் எடுத்த கோல்டுமேன் சாச்ஸ் நிறுவனம்
உலகளவில் நிதி மேலான்மையில் தலை சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் திகழ்ந்தது. மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே உரித்தாக இருந்த இந்த நிறுவனம் தற்போது தனது உத்தியை மாற்றி வருகிறது. சாதாரண பொதுமக்களுக்கும் தங்கள் நிறுவன சேவை கிடைக்கும் வகையில் பணிகளை அந்நிறுவனம் செய்து வருகிறது. ரோபோ மூலம் ஆலோசனை வழங்கலாம் என்று ரூட்டை மாற்றியுள்ள இந்நிறுவனத்தின் உத்தி பலரையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. தினசரி முதலீடு செய்யும் சாதாரண மனிதருக்குக் கூட வரி சலுகைகள் கிடைத்து பயன்படும் வகையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. கார்பரேட் பாண்டுகளையும் அந்நிறுவனம் வைத்திருக்க முடிவு செய்துள்ளது. 1டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுள்ள முதலீடுகளையும், கார்பரேட் பென்ஷன்கள் மற்றும் நிதியை அந்நிறுவனம் நிர்வகித்து வருகிறது. முதலீடுகளில் அதிகம் கவனம் செலுத்தும் இந்நிறுவனம், நிதி மேலாண்மை செய்யும் நிறுவனங்களை தங்கள் வாடிக்கையாளராக மாற்ற திட்டம் தீட்டி வருகிறது. அமெரிக்காவில் சொத்து நிர்வகிக்கும் டாப் பட்டியலில் கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் 9 ஆவது இடத்தில் உள்ளது. 17.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளை அந்நிறுவனம் முதல் காலாண்டில் நிர்வகித்து வருவதாக செருலி அசோசியேட்ஸ் நிறுவனம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.