வசீர் எக்ஸ் நிறுவனத்தில் பாதுகாப்பு அத்துமீறல்…
உலகளவில் பெரிய கிரிப்டோ கரன்சி நிறுவனமாக திகழ்வது வசீர் எக்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தில் அண்மையில் சைபர் தாக்குதல் நடந்துள்ளது. சைபர் தாக்குதலில் 230 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பணம் திருடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. லாசரஸ் என்ற குழுதான் இந்த தாக்குதலை செய்திருக்கும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த லாசரஸ் நிறுவனத்தின் பின்னாள் வட கொரிய அரசு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பும் இதுபோன்ற பெரிய அளவிலான பணம் திருடப்பட்டுள்ளது. இதுவரை ஒரு பைசாவை கூட மீட்க முடியவில்லை. வசீர்எக்ஸ் நிறுவனத்தின் மொத்த நிதியில் பாதி அளவுக்கு சைபர் தாக்குதல் மூலமாக திருடப்பட்டுள்ளது. லிமினல் இன்டர்பேசுக்கும் நிஜமான உள்ளடக்கத்துக்கும் இடையே உள்ள தரவுகளும் தவறாக உள்ளன. இந்த நிறுவனத்தில் தாக்குதல் நடந்ததால் இந்தியர்கள் பணம் போட்டவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மற்றும் கிரிப்டோவில் இருந்து பணத்தை எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திடீரென இந்த கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் டிஜிட்டல் கொள்ளை நடந்ததாக கூறப்படும் நிலையில் இதை போலீசில் சென்று புகாரும் அளிக்க முடியாது. ஏனெனில் இது கண்ணுக்கே தெரியாத பணம். வசீர் எக்ஸ் நிறுவனத்தில் பணம் திருடப்பட்டதை பாதுகாப்பு நிறுவனமான சைவர்ஸ் நிறுவனம்தான் வெளியிட்டுள்ளது.