1.48பில்லியன் அமெரிக்க டாலர் பங்குகளை விற்ற வாரன்..
அமெரிக்க பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஜாம்பவானாக வலம் வருபவர் வாரன் பஃபெட். இவர் அந்நாட்டின் பேங்க் ஆஃப் அமெரிக்காவின் 1.48 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை விற்றுவிட்டார். 34 மில்லியன் பங்குகளை அவர் விற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விற்கப்பட்டது போக மீதம் 998 மில்லியன் பங்குகளை வைத்திருக்கிறார். இதன் மதிப்பு 42 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் பேங்க் ஆஃப் அமெரிக்காவின் பங்குகள் 7.9 விழுக்காடு உயர்ந்துள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டு பேங்க் ஆஃப் அமெரிக்காவில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை வாரன் வாங்கியிருந்தார். இவர் முதலீடு செய்ததும் பேங்க் ஆஃப் அமெரிக்கா பங்குகள் பல மடங்கு உயர்ந்தன. இதனால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையும் கணிசமாக அதிகரித்தது.