மாதம் 250 ரூபாய் போதுமே..
இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களை அதிகப்படுத்த புதய நடைமுறையாக 250 ரூபாய்க்கு கூட பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும் திட்டத்தை செபி செய்து வருகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் பொதுமக்கள் மாதந்தோறும் சிப் எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மன்ட் பிளானில் பணத்தை செலுத்த வகை செய்யப்படும் என்று செபியின் தலைவர் மதாபி புரி புச் தெரிவித்துள்ளார். பாரத ஸ்டேட் வங்கியின் பரஸ்பர நிதி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பரஸ்பர நிதியில் 250 ரூபாய் மதிப்புள்ள சிப் திட்டம் தொழிலில் பல புதிய புரட்சிகளை செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது வரை சிப் என்பதன் சராசரி அளவாக மாதம் ஆயிரம் ரூபாய் என்ற நிலை உள்ளது. சில நிறுவனங்கள் 500, 100 ரூபாய்க்கு கூட சிப் செய்கின்றனர். இந்நிலையில் வருங்காலங்களில் குறைந்தளவு பணத்தை முதலீடு அதிகம் பேர் செய்ய இறுப்பதால் அது நல்ல பலன்தரும் என்றும் மதாபி குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்பத்தால் விலை குறைந்திருப்பதாகவும், நாம் அதனை கொண்டாட தவறிவிட்டதாகவும் மதாபி வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 21 ஆயிரத்து 262 கோடி ரூபாய் அளவுள்ள நிதி பரஸ்பர நிதியில் சிப் வாயிலாக மட்டுமே பெறப்பட்டுள்ளது என்கிறது புள்ளிவிவரம்.. 2016-ல் ஒரு மாதத்தில் சிப் மூலம் பெறப்பட்ட நிதி வெறும் 3122 கோடி ரூபாய் மட்டுமே. இந்தியாவில் பரஸ்பர நிதியில் பணம் போடுவதற்கு வெளிப்படைத்தன்மை அதிகாக இருப்பதாகவும், இதனால் அதிகளவிலான சிறு முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதியில் அதிகம் முதலீடு செய்திருக்கின்றனர்.