ஐபிஓவுக்கு இசைவு தெரிவித்த பெரிய வங்கி..
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக இருப்பது எச்டிஎப்சி நிறுவனம். இந்த நிறுவனத்தின் கிளை பிரிவான HDBநிதி சேவைகள் நிறுவனத்தின் ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு எச்டிஎப்சி இசைவு தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆம் தேதி இது தொடர்பாக ஒரு அவசர கூட்டமும் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் எச்டிபி நிதி சேவை நிறுவன ஐபிஓ அடுத்தாண்டு செப்டம்பருக்குள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எச்டிஎப்சி வங்கியின் வசம்தான் எச்டிபி நிதி நிறுவனத்தின் 94.6 விழுக்காடு பங்குகள் உள்ளன. 2023-24 நிதியாண்டில் மட்டும் எச்டிபி நிறுவனத்தின் செய்லபாட்டு வருவாய் 14,711 கோடி ரூபாயாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டில் வெறும் 12,402 கோடி ரூபாயாக இருந்தது. எச்டிபி நிதி சேவைகள் துறையின் லாபம் மட்டும் 2023-ல் 1,959 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் 2460 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே நேரம் எச்டிஎப்சி வங்கியின் முதல் காலாண்டு சற்று குறைந்துள்ளது. கடந்த 2023 முதல் காலாண்டில் 16,510 கோடி ரூபாயாக இருந்த லாபம் தற்போது இந்த காலாண்டில் 16,174 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. எச்டிஎப்சி வங்கயின் சொத்து தரமும் குறைந்துள்ளது. அந்த வங்கியின் வாராக்கடன் அளவு 9 அடிப்படை புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. கடந்த காலாண்டில் சில்லறை கடன்கள் 18600 கோடி ரூபாயாகவும், கிராமபுற கடன்கள் 7,200 கோடி ரூபாயாகவும், கார்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்கள் அளவு 26,600 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் 31 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி இந்த கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.