எச்டிஎப்சி வங்கி நிர்வாக இயக்குநர் அதிருப்தி..
எச்டிஎப்சி வங்கியின் நிர்வாக இயக்கநராக உள்ளவர் சசிதர் ஜகதீசன். இவர் அண்மையில் தனது வங்கியில் ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் டெபாசிட்கள் குறைந்ததால் கவலையை வெளிப்படுத்தியுள்ளார். தங்கள் நிறுவனம் எதிர்பார்த்ததை விட குறைவான அளவே டெபாசிட்கள் இருப்பதாகவும், எதிர்பார்த்ததைவிட அதிகமான நடப்பு கணக்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜூன் 30 ஆம் தேதி வரை 23.79 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே டெபாசிட் உள்ளதாகவும் ஆண்டுக்கு ஆண்டு இது 24.4 விழுக்காடு அதிகம் என்றும் தெரிவித்தார். கடனுக்கும்-டெபாசிட்டுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்து வருவதாகவும் அண்மையில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள நிலையில் எச்டிஎப்சி நிறுவனத்தின் நடப்பு கணக்கு டெபாசிட் விகிதம் 6.2விழுக்காடாக இருக்கிறது. ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் வெறும் 5.96 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே டெபாசிட்டாகவும், நடப்புக்கணக்குகளில் 2.67லட்சம் கோடி ரூபாய் மட்டுமே டெபாசிட் பெற முடிந்ததாக கூறினார். நடப்புக்கணக்கு வைத்திருக்கும் மிகப்பெரிய வங்கியாக எச்டிஎப்சி இருக்கிறது. மொத்தம் 11 விழுக்காடு கணக்குகள் நடப்புக்க ணக்குகளாக உள்ளன. கடந்தாண்டு எச்டிஎப்சி நிறுவனத்துடன் அதன் வங்கிப்பிரிவு இணைக்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 16,170 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்திருக்கிறது. இது ஆண்டுக்கு ஆண்டு 35.3விழுக்காடு அதிகமாகும். கடனுக்கும் டெபாசிட்டுக்கும் இடையே உள்ள இடைவெளி மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை 105 விழுக்காடாக இருந்ததாகவும், இதற்கு முன்பு இது வெறும் 85 விழுக்காடாக இறுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.