சீன நிறுவனங்கள் வீழ்த்திய முகேஷ் அம்பானி..
உலகிலேயே டாப் நெட்வொர்க் என்ற சாதனையை ரிலையன்ஸ் ஜியோ நிகழ்த்தியுள்ளது. டேட்டா பயன்பாடு என்ற பிரிவில் ஜியோ நிறுவனம் தான் உலகளவில் பெரிய நெட்வொர்க் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த துறையில் உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற பெருமையை ஜியோ பெற்றுள்ளது. ஜியோவின் காலாண்டு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன அதில் கடந்த காலாண்டில் ஜியோ நிறுவன வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் டேட்டாவின் அளவு 44 ஆயிரம் கோடி ஜிபி ஆக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 4 கோடி பேர் புதிதாக ஜியோவில் சேர்ந்துள்ளனர். இதுவரை ஜியோவின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 49 கோடி ரூபாயாக இருக்கிறது. ஜியோவுக்கு முன்பாக ஜீன நிறுவனம் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தது. ஒரு மாதத்துக்கு 30.3 ஜிபியை சீன நிறுவனம் விநியோகித்து வந்தது. இந்நிலையில் இந்த எண்ணிக்கை ஜியோவில் சராசரியாக 32.8 ஜிபியாக உயர்ந்துள்ளது. உலகளவில்ஜியோவுக்கு தற்போது வரை 49 கோடி வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் அதில் 13 கோடி பேர் 5ஜி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். டேட்டா பயன்பாட்டில் ஜியோ உலகளவில் முன்னணியாக இருந்தாலும், 5ஜி சேவையில் சீனாவுக்கு பின்னால்தான் இருக்கிறோம், ஜியோவின் தற்போதைய பொறுப்புகள் முகேஷ் அம்பானியின் மூத்த மகனிடம்தான் இருக்கின்றன.