சரிவில் முடிந்த சந்தைகள்
ஜூலை 22ஆம் தேதி திங்கட்கிழமை, இந்தியப்பங்குச்சந்தைகள் சரிவில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்102 புள்ளிகள் சரிந்து 80ஆயிரத்து 502 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21புள்ளிகள் வீழ்ந்து 24ஆயிரத்து 509 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவுற்றது Grasim Industries, HDFC Bank, Dr Reddy’s Labs, Tata Consumer , Infosys உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் கண்டன. Wipro, Kotak Mahindra Bank, Reliance Industries, ITC, SBI Life Insurance ஆகிய நிறுவனங்கள் சரிவை கண்டன். ஆட்டோமொபைல், சுகாதாரத்துறை, உலோகம், ஆற்றல் துறை பங்குகள் ஒரு விழுக்காடு உயர்ந்தன, ஊடகம், வங்கிகள், தகவல் தொழில்நுட்பத்துறை, ரியல் எஸ்டேட் மற்றும் சந்தையில் வேகமாக விற்பனையாகும் வீட்டு உபயோக பொருட்கள் துறை பெரிய சரிவு காணப்பட்டன.
Britannia Industries, Deepak Nitrite, Glenmark Pharma, Emami, Colgate Palmolive, MTNL, Nitin Spinners, Zydus Wellness, Dodla Dairy உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. சென்னையில் ஜூலை 22 ஆம் தேதி திங்கட்கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து விற்பனையானது. 54ஆயிரத்து 600 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 6825 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியில் மாற்றமின்றி 96 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோ 96ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்