பட்ஜெட்டில் புதிய அம்சங்கள் என்ன?
நாடே எதிர்பார்த்து காத்திருந்த மத்திய பட்ஜெட்டை ஒரு வழியாக நிதியமைச்சர் வழக்கம் போல தாக்கல் செய்து முடித்துவிட்டார். அதில் முக்கியமான அம்சங்களை இப்போது பார்க்கலாம். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பிரதானமான அம்சங்களில் முதன்மையானது , தங்கத்தின் மீதான சுங்க வரி 10 விழுக்காட்டில் இருந்து 6 விழுக்காடாக குறைந்துள்ளது. இதேபோல் பிளாட்டினத்தின் மீதான சுங்க வரி 6.4%ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய வரி செலுத்தும் முறையில் நிலைக்கழிவு எனப்படும் நிலையான கழிவு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் புதிய முறையில் வரி செலுத்துவோருக்கு ஆண்டுக்கு 17ஆயிரத்து 500 ரூபாய் மிச்சம் பிடிக்க முடியும். 1லட்சம் ரூபாயாக உயர்த்தப்படலாம் என்று பலரும் காத்திருந்த நிலையில் பாதி மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. வருமான வரித் தாக்கல் சட்ட ஆவணங்களை எளிமையாக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும். டிடிஎஸ் குற்றங்களை தடுக்கவும், தொண்டு நிறுவனங்களில் 2 வரி செலுத்தும் முறையை ஒன்றாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இவை தவிர்த்து
1) 1.68 லட்சம் கோடி ரூபாய் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு வழங்கப்பட
உள்ளது.
2) பிகாரில் பாலங்கள், சாலைகள் கட்டுமானத்துக்கு 26,000 கோடி ரூபாயும்
3)பாதுகாப்புத்துறைக்கு 6.21லட்சம் கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
4)செல்போன், சார்ஜர் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது
5)அமராவதி நகரை மேம்படுத்த 15,000 கோடி ரூபாயையும்
6)ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்தால் ஏஞ்சல் வரி நீக்கப்பட்டுள்ளது
7)1கோடி இளைஞர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் ஊக்கத் தொகையுடன் வேலைவாய்ப்பு பயிற்சி
8)1.52 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயம் சார்ந்த பணிகளுக்கு ஒதுக்கீடு
9)1.48லட்சம் கோடி ரூபாய் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10)பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் புதிதாக மேலும் 3 கோடி வீடுகள் கட்டவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.