உயர்ந்து முடிந்த சந்தைகள்
ஜூலை 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, இந்தியப்பங்குச் சந்தைகள் சரிவில் இருந்து மீண்டு வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்ஆயிரத்து 292 புள்ளிகள் உயர்ந்து 81ஆயிரத்து 332 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 428 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 834 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவுற்றது Shriram Finance, Cipla, Dr Reddy’s Laboratories, Infosys, Bharti Airtel and Apollo Hospitals உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் கண்டன. ONGC, Tata Consumer Products ஆகிய நிறுவனங்கள் சரிவை கண்டன. தகவல் தொழில்நுட்பத்துறை, ஆட்டோமொபைல், உள்கட்டமைப்பு,உலோகம், மருந்துத்துறை பங்குகள் 2 முதல் 3 விழுக்காடு ஏற்றம் கண்டன. Alembic Pharma, Ashok Leyland, Biocon, Divi’s Labs, Eicher Motors, Grasim, Fortis Healthcare, Infosys, Lupin உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. சென்னையில் ஜூலை 27ஆம் தேதி சனிக்கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து விற்பனையானது. ஒருசவரன் 51 ஆயிரத்து720 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 6465 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி முன்தின விலையில் மாற்றமின்றி 89 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளியும் விலையில் மாற்றமின்றி 89 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்