மிகப்பெரிய விலையை கொடுத்த அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்..
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு பெரிய பங்கை அண்மையில் அல்ட்ராடெக் நிறுவனம் வாங்கியது. இது பற்றிஸ்ரீ திக்விஜய் சிமென்ட் நிறுவனத்தின் செயல் தலைவர் அனில் சிங்வி அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பிர்லா குழுமத்தின் செயல்பாடுகள் கடந்த சில மாதங்களாக சரியான திசையை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறது. என்றார்நாசிக் பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையை அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் வாங்கியுள்ளதாகவும், அதேபோல் ஆர்கே தமானியும் 23 விழுக்காடு பங்குகளும் சரியான முதலீடுகள்தான் என்றார். அண்மையில் இந்தியா சிமென்ட்ஸ் பங்குகளில் தமானி முதலீடும் செய்திருந்தார். அப்போது அவருக்கு தெரியவில்லை இந்தியா சிமென்ட்ஸ் பங்குகள் 390 ரூபாய் செல்லும் என்று. இது மிக மிகப்பெரிய தொகைதான் என்றும் இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் சிங்வி கூறியுள்ளார். தென்னிந்தியாவில் சிறிய அளவில் இயங்கி வரும் சிமென்ட் நிறுவனங்கள் தற்போது பெரிய நிறுவனங்களுடன் இணைய அதிக நாட்டம் இருப்பதாகவும், தனித்து நின்றிருந்த இந்தியா சிமென்ட்ஸை தற்போது அல்ட்ரா டெக் சிமென்ட் நிறுவனம் பிடித்துள்ளது என்றும் சிங்வி குறிப்பிட்டார். 2006 முதல் 2022 வரை இத்தனை வேகத்தில் சிமென்ட் நிறுவனங்கள் கைமாறவில்லை என்றும், தற்போதுதான் சிமென்ட் துறை நல்ல வளர்ச்சி அடைந்து விற்பனை சூடுபிடித்ததுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த ஜூலை 28 ஆம் தேதி 32.72 விழுக்காடு பங்குகளை இந்தியா சிமென்ட்ஸிடம் இருந்து அல்ட்ராடெக் வாங்க ஒப்புதல் கிடைத்தது.
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு 14.5 மில்லியன் டன் அளவுக்கு உற்பத்தி திறன் கொண்டது. அதே நேரம் அல்ட்ராடெக் நிறுவனம் ஆண்டுக்கு 141 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்டதாகும்.