ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் நிறுவன அப்டேட்..
ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் 80 விழுக்காடு டெபாசிட்கள் தற்போது சில்லறையாக இருப்பதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் இது 6 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், அண்மையில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மழை பெய்ததாகவும், அதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கையும், நிதியும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியநாதன் குறிப்பிட்டார். மழை வெள்ளத்தால் கடன்களை திரும்பப் பெற முடியாத சூழல் அதிகமாக இருப்பதாகவும், இதற்காக சில காலம் அவகாசம் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். தமிழ்நாட்டில்தான் தங்கள் நிறுவனம் சிறப்பாக இயங்குவதாக கூறிய அவர்,கடந்த 5 ஆண்டுகளில் டெபாசிட்கள் அதிகளவில் இருப்பதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், தங்கள் நிறுவனத்தின் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக கூறினார். உள்கட்டமைப்பு சார்ந்த நிதியுதவியை நம்பியே தங்கள் நிறுவனம் இயங்கி வருவதாகவும், அண்மையில்தான் தங்க நகைக்கடன், டிராக்டர்களுக்கான கடன்கள், கல்விக்கடன்களை வழங்கத் தொடங்கியுள்ளதாகவும், அதில் பலவகைகளில் வருவாய் வருவாதகவும் அவர் தெரிவித்தார். தங்கள் நிறுவனத்துக்கு வருவாய் மிக வலுவாக வருவாக குறிப்பிட்ட வைத்தியநாதன், செயல்பாட்டு வருவாய் மீண்டும் லாபகரமாக இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.