செப்டம்பரில் ராணிப்பேட்டையில் ஆலையை தொங்கும் ஜேஎல்ஆர்..
வரும் செப்டம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய ஜாகுவார் லேண்ட் ரோவர் உற்பத்தி ஆலையின் கட்டுமானப்பணிகளை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த ஆலை ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தொடங்க இருக்கிறது. செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட உள்ள இந்நிறுவனம்400 ஏக்கரில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்த ஆலைக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார்.சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் வாயிலாக பொருட்களை ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே டாடா நிறுவனம் தமிழ்நாட்டில் பல வகையான கார்களை தயாரித்து வரும் நிலையில், ஜாகுவார் லேண்ட் ரோவர் வகை கார்களை மின்சார கார்களாக தயாரிக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இந்த ஆலை, தற்போது ஹியூண்டாய் நிறுவனம் பயன்படுத்தும் தொடர்பு சங்கிலியையும், நிசான் நிறுவனத்தின் சப்ளையர்களையும் அப்படியே பயன்படுத்திக் கொள்ள இருப்பதாகவும், தேவையான உதவிகளை மாநில அரசு செய்துதரும் என்றும் கூறப்படுகிறது. கட்டுமானப்பணிகள் முடிந்து அடுத்தாண்டு பிற்பகுதியில் இந்த ஆலையில் உற்பத்தி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடத்தில் 18ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மதிப்பை கூட்டும் என்றும் கூறப்படுகிறது. புனேவில் உள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் ஆலையில் ஒருங்கிணைப்பு பணிகள் மட்டுமே நடக்கிறது. கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் , 9ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது. இதன்படி டாடா மோட்டார்ஸ் ஆலை அமைந்தால் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.