சாந்த நிலையில் சந்தைகள்..
வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய மாற்றம் காணப்படவில்லை. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 9 புள்ளிகள் உயர்ந்து 79,496 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 7 புள்ளிகள் உயர்ந்து 24,141 புள்ளிகளில் வணிகத்தை முடித்தன. Power Grid Corp, Trent, Infosys, HCL Tech, Tech Mahindraஉள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன.Asian Paints, Britannia, Apollo Hospitals, Cipla, ONGC உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. வங்கித்துறை பங்குகள் 0.6 விழுக்காடும், தகவல் தொழில்நுட்பத்துறை 1 விழுக்காடு அளவுக்கும் பங்குகள் விலை உயர்ந்தன. ஆட்டோமொபைல், சுகாதாரத்துறை, உலோகம், ஊடகத்துறை பங்குகள் அரை முதல் ஒரு விழுக்காடு குறைந்தன. Coforge, Wipro, Federal Bank, Indian Hotels, KIMS, Page Industries, Vimta Labs, NIIT, Indraprastha Gas, CarTrade Tech, Krsnaa Diagnostics உள்ளிட்ட 250க்கும் அதிகமான பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டுள்ளன. நவம்பர் 11 ஆம் ஆம் தேதி திங்கட்கிழமை ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 55 ரூபாய் குறைந்து 7ஆயிரத்து 220 ரூபாயாகவும், ஒரு சவரன் 57 ஆயிரத்து 760 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 1ரூபாய் குறைந்து 102 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இங்கே நகை தொடர்பாக குறிப்பிட்டுள்ள விலைகளுடன் எல்லா கடைகளிலும் தங்கம்,வெள்ளிக்கு நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.