22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
தொழில்துறை

டொயோடா வருவாய் சரிவு

டிரம்ப் விதித்த வரியால் டொயோட்டா நிறுவனத்தின் வருவாய் சரிந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் உதிரிபாகங்கள் மீது 15% வரி விதித்ததால், டொயோட்டா நிறுவனம் அதன் முழு ஆண்டு வருவாய் கணிப்பை குறைத்துள்ளது. 2025-ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் 37% குறைந்து $5.7 பில்லியனாக (841 பில்லியன் யென் ஆக) சரிந்துள்ளது.

நிதி நிலைமை

கடந்த 2024-ஆம் ஆண்டு இதே காலாண்டில், டொயோட்டாவின் நிகர லாபம் $9.26 பில்லியனாக (1.33 டிரில்லியன் யென்) இருந்தது. அதை ஒப்பிடும்போது இந்த வருவாய் சரிவு குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இந்தக் காலாண்டில் விற்பனை 3 % அதிகரித்து $82 பில்லியன் (12 டிரில்லியன் யென்) ஆக இருந்தது.

வரிகள் காரணமாக டொயோட்டா நிறுவனம் கிட்டத்தட்ட $10 பில்லியன் இழப்பை சந்திக்கும் என ராய்ட்டர்ஸ் அறிக்கை ஒன்று கூறுகிறது. இந்த வரி விதிப்பால் மிக மோசமாக பாதிக்கப்படும் உலக நிறுவனங்களில் டொயோட்டாவும் ஒன்று என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.


எதிர்கால கணிப்பு


டொயோட்டா, 2026 மார்ச் மாதத்துடன் முடிவடையும் முழு நிதி ஆண்டிற்கான நிகர லாபத்தை $18 பில்லியனாக (2.66 டிரில்லியன் யென்) குறைத்துள்ளது.

இது, முன்பு கணிக்கப்பட்ட $21 பில்லியன் (3.1 டிரில்லியன் யென்) லாபத்தை விட குறைவாகும். கடந்த நிதி ஆண்டில் நிறுவனம் $33.44 பில்லியன் (4.8 டிரில்லியன் யென்) லாபம் ஈட்டியது.

ஏற்பட்ட சிக்கல்கள்

ஜப்பான் மீது அமெரிக்கா 15% இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், மெக்சிகோ மற்றும் கனடா போன்ற நாடுகளில் டொயோட்டா உற்பத்தி செய்யும் வாகனங்களின் ஏற்றுமதி நிலை தெளிவாக இல்லை.

இந்த இரு நாடுகளும் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஒப்பந்தத்தின் கீழ் வர்த்தக தடைகளை நீக்கியதால், இந்த உற்பத்தி மையங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு வரி விதிக்கப்படுமா என்பது குறித்து நிச்சயமற்ற நிலை உள்ளது.

இந்த இறக்குமதி வரி, டோயோட்டா நிறுவனத்திற்கு நிதி ரீதியாக பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *