HUL: தலைமையில் மாற்றம்
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்புகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான நிரஞ்சன் குப்தா, புதிய தலைமை நிதி அதிகாரியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.
விரைவில் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (ஹெச்.யு.எல்.), அதன் தலைமை நிதி அதிகாரியான ரித்தேஷ் திவாரி, யூனிலீவரின் தாய் நிறுவனத்தில் உலகளாவிய இணைப்பு, கருவூலத் துறைக்கு தலைமைப் பொறுப்பு வகிக்க லண்டனுக்கு மாறுவதாக வியாழக்கிழமை தெரிவித்தது.
அவருக்குப் பதிலாக, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான நிரஞ்சன் குப்தா, தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (ஹெச்.யு.எல்.) வெளியிட்ட அறிக்கையின்படி, குப்தா, ஹெச்.யு.எல். மேலாண்மைக் குழுவில் ஒரு உறுப்பினராகவும் இருப்பார். மேலும், அவர் செப்டம்பர் 1, 2025 முதல் புதிய பொறுப்பை ஏற்பார்.
“ரித்தேஷ் திவாரி, நவம்பர் 1, 2025 முதல் யூனிலீவர் பிஎல்சி-யில் உலகளாவிய இணைப்பு, கருவூலத் துறைக்குத் தலைமை வகிக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர், லண்டனில் பணிபுரிவார்,” என்று ஹெச்.யு.எல். தெரிவித்துள்ளது.
திவாரி, 2021-ல் ஹெச்.யு.எல்.-இன் நிதி, தலைமை நிதி அதிகாரியாகப் பொறுப்பேற்றார். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் நிறுவனத்தை வழிநடத்தி, நிதி வளர்ச்சியைப் பாதுகாத்து, நிலையான வளர்ச்சிக்கு உதவினார்.
போர்ட்ஃபோலியோவை மெருகேற்றுவதற்கும், ஹெச்.யு.எல்.-ஐ எதிர்காலத்திற்குத் தயார்படுத்துவதற்கும் உதவிய முக்கிய கையகப்படுத்துதல், விற்பனை, கூட்டு முயற்சிகளுக்கு திவாரி தலைமை வகித்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஹெச்.யு.எல்.-இன் தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநரான பிரியா நாயர், “அவர் (திவாரி) எங்கள் போர்ட்ஃபோலியோ மாற்ற முயற்சிகளுக்குத் தலைமை தாங்கினார்.
நிரஞ்சன் குப்தா தனது வாழ்க்கையை ஹெச்.யு.எல்.-இல் தொடங்கினார். அங்கு, 20 ஆண்டுகள் பல்வேறு தலைமைப் பொறுப்புகளில் இருந்தார். பின்னர், 2017-ல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாகச் சேர்ந்தார்.
அதன் பிறகு, 2023-ல் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்த்தப்பட்டார். அங்கு அவர் நீண்டகால உத்திக்கான திட்டங்களை உருவாக்குவதிலும், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடனான கூட்டு முயற்சி உள்ளிட்ட முக்கியமான உத்திசார்ந்த கூட்டாண்மைகளை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகித்தார் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
