Intel-Us govt ஒப்பந்தம்
அமெரிக்காவின் டிரம்ப் அரசு, இன்டெல் நிறுவனத்தின் 10% அமெரிக்க உரிமையை பெற்றுள்ளதாக தலைமை செயல் அதிகாரி அமெரிக்க தொழில்நுட்ப தலைமைக்கு உறுதியளித்தார் .
அமெரிக்க அரசு இன்டெல் நிறுவனத்தில் 10% பங்குகளை $8.9 பில்லியன் செலவில் வாங்கியுள்ளது. இந்த நிதி CHIPS சட்டம், Secure Enclave திட்டம் ஆகியவற்றின் மானியங்கள் மூலம் பெறப்பட்டது. அதிபர் டிரம்ப் அறிவித்த இந்த நடவடிக்கை, அமெரிக்க தொழில்நுட்ப உற்பத்தியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அரசாங்கம், ஒரு பங்குக்கு $20.47 என்ற விலையில் 433.3 மில்லியன் இன்டெல் பங்குகளைப் பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை பங்கின் இறுதி விலை $24.80 ஆக இருந்ததால், அரசுக்கு $1.9 பில்லியன் லாபம் என ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் இன்டெல் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர்களில் ஒன்றாக அமெரிக்க அரசை மாற்றினாலும், அதற்கு வாக்களிக்கும் உரிமை அல்லது நிர்வாகக் குழுவில் இடம் இல்லை. இன்டெல் தலைமை செயல் அதிகாரி லிப்-பு டான், இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார்.
இந்த ஒப்பந்தம் விரைவாக நடந்தது. சில வாரங்களுக்கு முன்பு, சீன நிறுவனங்களில் லிப்-பு டான் செய்த முதலீடுகள் குறித்து டிரம்ப் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் டான் அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்த பின்னர், பேச்சுவார்த்தை விரைவாக நடந்து, ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்த அறிவிப்புக்குப் பிறகு இன்டெல் பங்குகள் 6% க்கும் மேல் உயர்ந்தன.
இருப்பினும், விமர்சகர்கள் இது “மோசமான முடிவு” என எச்சரித்துள்ளனர். அரசியலும் வணிக முடிவுகளும் கலக்கும் அபாயம் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
சில முதலீட்டாளர்கள், வரி செலுத்துவோருக்கு வருமானம் கிடைக்குமா என கேள்வி எழுப்பினர். இந்தத் தலையீடு, 2023 முதல் $22 பில்லியன் இழப்பு, பெரிய அளவிலான பணிநீக்கங்கள் ஸ்மார்ட்போன் செயற்கை நுண்ணறிவு துறைகளில் ஏற்பட்ட வாய்ப்புகளை இழந்த இன்டெல், தனது நிலையை மீட்டெடுக்கப் போராடி வரும் நிலையில் வந்துள்ளது.
இன்டெல் ஒரு காலத்தில் மிகப்பெரிய நிறுவனமாக இருந்தாலும், அதன் $108 பில்லியன் மதிப்பு, இப்போது என்.வி.டி.யா.வின் $4.3 டிரில்லியன் சந்தை மதிப்பை விட மிகக் குறைவு.
அரசாங்கத்தின் பங்கு, இன்டெல் நிறுவனத்தை மீண்டும் உயர்த்த உதவுமா அல்லது அரசியல் தலையீடு குறித்த புதிய கவலைகளை உருவாக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
