புதுப்புது உச்சம் தொடும் தங்கம்..
செவ்வாய் அன்று தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. சர்வதேச தங்க சந்தையில், கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிறந்த மாதமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.,
அமெரிக்க அரசாங்கம் முடக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சமும், அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புகளுக்கான எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருவதால், பாதுகாப்பான புகலிட உலோகமான தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ரூ.86,800ஆக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அடிப்படைகள் :
ஸ்பாட் கோல்ட் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.2% உயர்ந்து $3,842.76 ஆக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் இதுவரை வெள்ளி 11.4% உயர்ந்துள்ளது, ஆகஸ்ட்
2011 க்குப் பிறகு அதன் சிறந்த மாதமாக இது உள்ளது.
டிசம்பர் டெலிவரிக்கான அமெரிக்க தங்க எதிர்கால விலை, 0.4% அதிகரித்து $3,872 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்க அரசின் கடன் அளவிற்கான உச்ச வரம்பை உயர்த்துவது தொடர்பாக அதிபர் டிரம்பிற்கும், எதிர்கட்சியான ஜனநாயக கட்சியினருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால், நிதிப் பற்றாகுறையினால் அமெரிக்க அரசு முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.
அதே சமயத்தில், அமெரிக்காவின் சமீபத்திய பொருளாதாரத் தரவுகள், இந்த ஆண்டு அமெரிக்க ரிசர்வ் வங்கியான பெடரல் ரிசர்வ், வட்டி விகிதத்தை மேலும் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. அடுத்த பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் 25 அடிப்படை புள்ளி (0.25%) குறைப்புக்கான வாய்ப்புகள், தோராயமாக 89% வரை உள்ளதாக CME குழுமத்தின் ஃபெட்வாட்ச் தெரிவித்துள்ளது.
அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற காலங்களில் சர்வதேச முதலீட்டாளர்கள், பாதுகாப்பு தேடி தங்கத்திற்கு மாறுவார்கள். குறைந்த வட்டி விகித சூழலும் தங்க முதலீடுகளை ஊக்குவிக்கிறது.
உலகின் மிகப்பெரிய தங்கத்தின் அடிப்படையிலான நிதியான SPDR கோல்ட் டிரஸ்ட் வசம் உள்ள தங்கத்தின் அளவு திங்களன்று 0.60% உயர்ந்து 1,011.73 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. இது வெள்ளிக்கிழமை 1,005.72 டன்னாக இருந்தது.
