22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
பொருளாதாரம்

செலவுகளை குறைக்கும் வேதாந்தா..

மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட வேதாந்தா குழுமத்தின் தாய் நிறுவனமான லண்டனை தளமாகக் கொண்ட வேதாந்தா ரிசோர்சஸ் (VRL), அதன் வட்டி செலவுகளை குறைக்க திட்டமிட்டுள்ளது.

வட்டி அதிகம் கொண்ட தனியார் கடனை திருப்பி செலுத்தி விட்டு, அதற்கு பதிலாக குறைந்த வட்டியில் கடன் பெற, ஏழு ஆண்டு டாலர் பத்திரங்கள் மூலம் 50 கோடி டாலர் திரட்ட திட்டமிட்டுள்ளது.

வேதாந்தா ரிசோர்சஸ் ஃபைனான்ஸ் II மூலம் வெளியிடப்படும் இந்த கடன் பத்திரங்கள் VRL, ட்வின் ஸ்டார் ஹோல்டிங்ஸ், வெல்டர் டிரேடிங் மற்றும் வேதாந்தா ஹோல்டிங்ஸ் மொரீஷியஸ் II உள்ளிட்ட துணை நிறுவனங்களால் உத்தரவாதம் அளிக்கப்படும்.

விதி 144A/Reg Sன் கீழ் வெளியிடப்பட உள்ள இந்த கடன் பத்திரங்களுக்கு மூடீஸ் நிறுவனம் B2 மதிப்பீடு, ஃபிட்ச் B+ மதிப்பீடும் அளித்துள்ளன. அவற்றின் விலை இன்று நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அக்டோபர் 2032 இல் முதிர்ச்சியடையும்.

சிட்டிகுரூப், பார்க்லேஸ், ஜேபி மோர்கன், மஷ்ரெக், எஸ்எம்பிசி மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு ஆகியவை இதன் உலகளாவிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முதன்மை மேலாளர்களாக செயல்படுவர்.

மறுநிதியளிப்பு, சொத்து விற்பனை மற்றும் பங்கு உயர்வுகள் மூலம் VRL, அதன் மொத்தக் கடனை 2022இல் 910 கோடி டாலராக இருந்து ஜூன் 2025 இல் 470 கோடி டாலராக வெகுவாக குறைத்துள்ளது.

அதன் சராசரி பத்திர முதிர்ச்சியை சுமார் மூன்று ஆண்டுகளில் இருந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக நீட்டித்துள்ளது, அடுத்த 30 மாதங்களில் 120 கோடி டாலர் கடன் மட்டுமே நிலுவையில் உள்ளது, அதில் 80 கோடி டாலர் வெளிப்புறக் கடன் என்று இன்று பத்திர முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளது.

2025ல் புதிய வங்கிக் கடன்கள் மற்றும் ரூபாயில் மதிப்புடைய மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் 220 கோடி டாலர் கடன்களை திரட்டியுள்ளது. இது வட்டி செலவுகளை 1.3% அளவுக்கு குறைத்தது. இது தவிர, 100 கோடி டாலர் QIP மற்றும் பிற வெளியீடுகள் மூலம் 40 கோடி டாலரை திரட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *