TCS-ன் அடுத்த அதிரடி திட்டம்..
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த மூன்று ஆண்டுகளில் பிரிட்டனில் 5,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது. பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சியில் அதன் நீண்ட கால உறுதிபாட்டை சுட்டுக்காட்டுகிறது. புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களுடன் இணைந்து செயல்படும் நோக்கத்துடன் லண்டனில் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அனுபவ மண்டலம் மற்றும் வடிவமைப்பு ஸ்டுடியோவையும் உருவாக்கியுள்ளது.
TCS பிரிட்டனில் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தொழில் துறைகளை டிஜிட்டல் மயமாக்க உதவியுள்ளது. தற்போது, இது நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 42,000 வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
TCS இன் PacePort மையங்களை முன் மாதிரியாகக் கொண்டு இந்த புதிய லண்டன் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நியூயார்க்கிலும் இதே போன்ற வடிவமைப்பு ஸ்டுடியோவை தொடங்கியது.
பிரிட்டனில் AI தொழில்நுட்ப பரவலை விரைவுபடுத்த கல்வி நிறுவனங்கள், ஸ்டார்டப் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் கூட்டு சேர திட்டமிட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் மும்பையில் உள்ள TCS இன் பேன்யன் பார்க் வளாகத்திற்கு விஜயம் செய்த பிரிட்டீஷ் முதலீடுகளுக்கான அமைச்சர் ஸ்டாக்வுட், பிரிட்டனின் பொருளாதாரத்தில் TCS-இன் பங்களிப்பை விவரிக்கும் ஆக்ஸ்போர்டு பொருளாதார அமைப்பின் அறிக்கையை வெளியிட்டார்.
2024 நிதியாண்டில், TCS நிறுவனம் UK பொருளாதாரத்திற்கு £330 கோடி அளவுக்கு பங்களித்தது. சுமார் 20,400 ஆசிரியர்களின் சம்பளத்திற்கு சமமான £78 கோடிக்கும் அதிகமான வரிகளை செலுத்தியது.
மேலும் UK-வின் 19 தளங்களில் நேரடியாகவோ அல்லது அதன் விநியோகச் சங்கிலி மூலமாகவோ 42,700 வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதில் பொறியியல் மற்றும் தரவு பகுப்பாய்வுகளில் 15,300 தொழில்நுட்ப பணியிடங்கள் அடங்கும்
