22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

TATA CAPITAL-ன் அடுத்த இலக்கு..!!

வங்கி சாரா நிதி நிறுவனமான டாடா கேபிடல், அடுத்த மூன்று ஆண்டுகளில் அதன் கடன் புத்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அதன் கடன் செலவுகளை 1 சதவீதத்திற்கும் கீழாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக திங்களன்று அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதல் கட்ட பங்கு வெளியீட்டில் (IPO) திரட்டப்பட்ட புதிய மூலதனம் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு போதுமானதாக இருக்கும் என்று அதன் CEO மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜீவ் சபர்வால், பங்கு சந்தை அறிமுகத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

டாடா கேபிடல் பங்குகளின் வெளியீட்டு விலையான ரூ.326 உடன் ஒப்பிடும்போது 1 சதவீதம் அதிக விலையில் திங்களன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது. பின்னர் இது ரூ.330.90 இல் வர்த்தகம் செய்யப்பட்டது, இது பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ இரண்டிலும் வெளியீட்டு விலையிலிருந்து 1.50 சதவீதம் அதிகமாகும்.

செய்தியாளர்களிடம் பேசிய சபர்வால், “நமது நாட்டின் வளர்ச்சி விகிதம் நாம் நம்புவது போல் நீடித்தால், அடுத்த மூன்று ஆண்டுகளில் எமது கடன் புத்தகம் இரட்டிப்பாகும்” என்றார்.

நிறுவனத்தின் கடன் புத்தகம் தற்போது ரூ.2.3 லட்சம் கோடியாக உள்ளது. இதில் ரூ.50,000 கோடி கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சேர்க்கப்பட்டது. அதே சமயத்தில் முதல் ரூ.50,000 கோடியை எட்ட பத்து ஆண்டுகள் ஆனது ஒப்பிடத்தக்கது.

கடன் செலவுகள் விகிதம், டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் நிறுவனம் டாடா கேபிடலுடன் இந்த ஆண்டு மே மாதத்தில் இணைக்கப்பட்ட பிறகு 1.4 சதவீதத்தைத் தொட்டுள்ளதாக சபர்வால் கூறினார். டாடா கேபிட்டலுக்கான கடன் செலவுகள் எப்போதும் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்த நிலையில், மிக விரைவில் மீண்டும் 1 சதவீதத்திற்கும் குறைவாக அதை கட்டுப்படுத்துவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *