டாடா மோட்டார்ஸில் நடப்பது என்ன?
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரிவினை அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது. பிரிவினைக்கான பங்குதாரர்களின் தகுதியை உறுதி செய்வதற்கான பதிவு தேதியாக, அக்டோபர் 14, 2025 ஐ நிர்ணயித்திருந்தது.
டாடா மோட்டார்ஸ் பிரிவினை திட்டத்தின் கீழ், டாடா மோட்டார்ஸ் லிமிடெட் ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனமாகத் தொடரும். டாடா மோட்டார்ஸ் லிமிடெட் அதன் பெயரை டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெகிக்கில்ஸ் லிமிடெட் என்று மாற்றும்.
மின்சார வாகன வணிகம் மற்றும் JLR இல் அதன் முதலீடுகள் உட்பட பயணிகள் வாகன வணிகத்தை இது மேற்கொள்ளும். TML கமெர்சியல் வெகிக்கில்ஸ் லிமிடெட், டாடா மோட்டார்ஸ் லிமிடெட் என மறுபெயரிடப்படும்.
பங்கு சந்தையில் 9:00 மணி முதல் காலை 10:00 மணி வரை நடைபெற்ற சிறப்பு அமர்வில், இந்த முன்னாள் CV நிறுவனத்தின் பங்கு விலை தீர்மானிக்கப்பட்டது. டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெகிக்கில்ஸ் பங்கு விலை, NSE இல் ஒரு பங்கிற்கு ₹400 என வர்த்தகம் ஆகத் தொடங்கியது. பிஎஸ்இயில், டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெகிக்கில்ஸ் பங்கின் விலை, ஒரு பங்குக்கு ₹399 இல் தொடங்கியது.
டாடா மோட்டார்ஸின் பிரிப்பு பங்கு உரிமை விகிதம் 1:1 ஆகும். இதன் படி, டாடா மோட்டார்ஸ் பங்குதாரர்களுக்கு, பதிவு தேதி அன்று, டாடா மோட்டார்ஸில் ₹2 முக மதிப்புள்ள முழுமையாக செலுத்தப்பட்ட ஒவ்வொரு பங்கிற்கும், டிஎம்எல் பேசஞ்சர் வெகிக்கில்ஸில் முழுமையாக செலுத்தப்பட்ட தலா ₹2 முக மதிப்புள்ள ஒரு பங்கு வழங்கப்படும்.,
