ஆக்சிஸ் வங்கியின் கட்டணங்களில் மாற்றம் – மேலும் படிக்க!
ஆக்சிஸ் வங்கி, அதன் சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கான பல்வேறு சேவைக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்த மாற்றங்களில் சில, மே 1, 2021 முதல் நடைமுறைக்கு வந்த போதிலும், வேறு சில திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இலவச வரம்புக்கு அதிகமாக ATMளில் இருந்து பணம் எடுக்கும் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், சில வகையான சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகை (minimum balance requirements) அதிகரிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் (telecom regulatory authority) அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகளைத் தொடர்ந்து வங்கி தனது குறுஞ்செய்திக் (SMS) கட்டணங்களை மறுபரிசீலனை செய்தது. ஜூலை 2021 முதல் ஒவ்வொரு எஸ்எம்எஸ் அறிவிப்புக்கும் 25 பைசா வீதம் வசூலிக்கப்படும். இதன் உச்சபட்ச அளவாக மாதமொன்றுக்கு ₹25 இருக்கும். இதில், வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளின் (transaction) போது அங்கீகாரத்திற்காக அனுப்பப்படும் ஓ.டி.பி (OTP) அறிவிப்புகள் மற்றும் வங்கியின் விளம்பர செய்திகள் பொருந்தாது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறை மேம்பாட்டு மாற்றங்கள் காரணமாக, ஆக்சிஸ் வங்கியும் அதன் எஸ்எம்எஸ் கட்டணங்களை மாற்றி அமைத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் ₹5 என்ற தொகுப்புக் கட்டணத்தை வசூலிப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு எஸ்எம்எஸ் அறிவிப்புக்கும் இப்போது 25 பைசா வசூலிக்கப்படும். மாதத்திற்கு அதிகபட்சம் ₹25 ரூபாய் வசூலிக்கப்படும். ஜூலை 1 முதல் (ஒரு முறை கடவுச்சொற்கள் – OTP மற்றும் விளம்பர செய்திகளைத் தவிர) இது அமலுக்கு வருகிறது, என்று ஆக்சிஸ் வங்கி அதன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இதற்கிடையில், டிஜிட்டல் மேம்பாட்டுத் திட்டத்திற்கு (digital transformation programme) அங்கீகாரம் அளிக்க அமேசான் வெப் சர்வீசஸ் (Amazon Web Services-AWS) உடன் ஆக்சிஸ் வங்கி நீண்டகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, AWS இன் ஆகச்சிறந்த தொழில்நுட்ப வாய்ப்புகளை பயன்படுத்தி வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தரமிக்க சேவையை வழங்க வங்கி திட்டம்மிட்டிருக்கிறது. உடனடி பணப்பரிமாற்ற சேவை (IMPS) மற்றும் 6 நிமிடங்களுக்குள் ஆன்லைன் வங்கிக் கணக்கை உருவாக்கும் சேவைகள் இந்த செயல்திட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது.
ஆக்ஸிஸ் வங்கிக்கு 20 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேம்பட்ட மின்னணு வாங்கி சேவைகளை விரும்புகிறார்கள். ஆன்லைன் வழியாக டெபாசிட் செய்வது, கடன்கள் பெறுவது, கடன் அட்டைகள் பெறுவது போன்ற சேவைகளை வாடிக்கையாளர்கள் கோரி வந்த நிலையில் இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்திருக்கிறது.