என்னது? நீங்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு உண்டா? மேலும் படிக்க!
நம் நாட்டிற்கு இது ஒரு கடினமான காலம். பலரும் உதவி கோருகின்றனர். பல உதவி கோரிக்கைகள் crowdfunding platforms மூலமாக வருகின்றன. அத்தகைய எந்த தளத்தின் மூலமாகவும் நீங்கள் நன்கொடையளிக்கிறீர்கள் என்றால், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 – G யின்படி தேவைப்படுகிறவர்களுக்கு உதவும் வகையிலான வரி விலக்கு பெறலாம். ஆனால், ஒவ்வொரு முறை நன்கொடை அளிக்கும் போதும் உங்களால் வரிவிலக்கைக் கோர முடியாது. மேலும் எல்லா நிறுவனங்களும் பிரிவு 80 – G யின் கீழ் உங்களுக்கு வரிவிலக்குக்கான சான்றிதழ் வழங்கத் தகுதியுடையதாக இருக்காது.
எவ்வளவு வரி விலக்கு பெற முடியும்?
வரி விலக்கு கூறுபவர்களுக்கு வழங்கத் தேவைப்படும் 80 – G சான்றிதழை வழங்க ஒரு தொண்டு நிறுவனம் வருமான வரித் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். ஒருவேளை, தொண்டு நிறுவனம் பதிவு செய்திருந்தால், நீங்கள் நன்கொடையாக வழங்கிய பணத்தில் 50-100% வரிவிலக்கு கோரலாம். பல பதிவு செய்யப்பட்ட / பதிவு செய்யாத லாப நோக்கமில்லாத நிறுவனங்கள் (nonprofit organisations) நிதி திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி இருக்கிறது. நீங்கள் ஒரு கூட்டு நிதி சேகரிக்கும் தளத்தின் (crowdfunding platforms) மூலமாக நன்கொடை அளிக்கிறீர்கள் என்றால், வரிவிலக்குப் பெற முறையான 80 – G சான்றிதழ் பெற்றாக வேண்டும். ஆகவே நீங்கள் நன்கொடை அளிக்கும் நிறுவனம் அத்தகைய ஒரு கட்டமைப்புக்குள் வருகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
ஒரு தொண்டு நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை வரி செலுத்துபவர் சரிபார்க்க முடியும். ஒவ்வொரு கூட்டு நிதி சேகரிப்பு அமைப்பும் நன்கொடை பெறும் போது 80-G விலக்கு கோருவதற்கான தகுதி விவரங்களை வருமான வரித்துறையிடம் வழங்குகிறது. இது தவிர, நன்கொடையாளர் வருமான வரி இணையதளத்தில் 80 – G கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை சரிபார்க்க முடியும்.
நன்கொடை பெறும் நிறுவனம் படிவம் 10 BD யைத் தாக்கல் செய்ய வேண்டும்
மக்கள் சார்பாக நன்கொடை பெறும் தொண்டு நிறுவனம் வருமான வரித் துறைக்கு, நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை வழங்க படிவம் 10 BD தாக்கல் செய்ய வேண்டும். இது வரி செலுத்துவோருக்கு முன்கூட்டியே நிரப்பப்பட்ட தகவல்களை வழங்க வருமான வரித் துறைக்கு உதவும். பட்ஜெட் 2020, பிரிவு 80 G யின் கீழ் வரிவிலக்கு கோரும் மாற்றத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் நன்கொடை பெறுபவர் படிவம் 10 BD யைத் தாக்கல் செய்ய வேண்டும். இது பல்வேறு நன்கொடையாளர்கள், அவர்களின் நிரந்தர கணக்கு எண், நன்கொடையின் மதிப்பு போன்றவற்றை பட்டியலிடும் ஆவணமாக அரசிடம் இருக்கும். வரி அதிகாரிகள் நன்கொடையாளரின் வரி வருமானத்தை,, பிரிவு 80 G யின் கீழ் பிடித்தத்துடன் முன்கூட்டியே நிரப்ப அனுமதிப்பார்கள்அனுமதிக்கும். படிவம் 10 BE யில் செய்யப்பட்ட நன்கொடைக்கான சான்றிதழை வரி செலுத்துபவர் தொடர்ந்து பெறுவார்.
விவரங்களை சரிபார்க்கவும்
வரி செலுத்துவோருக்கு முன் நிரப்பப்பட்ட நிறுவனங்களின் தகவல்களை வரித்துறை வழங்கும், ஆனால் உங்கள் வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்கும் முன் அத்தகைய தகவல்களை சரிபார்க்க வேண்டியது அவசியம். நிறுவனம் வழங்கிய ரசீதுடன் இணைத்து அதை நீங்கள் அதை சரிபார்க்கலாம். வரிவிலக்கு கோரிக்கையை தாக்கல் செய்வதற்கு முன், நன்கொடையின் அளவு, நிறுவனத்தின் விவரங்கள் மற்றும் நன்கொடையின் தகுதி (50% அல்லது 100% விலக்கு கோரல்) போன்ற விவரங்களை சரிபார்ப்பது நல்லது .
உங்கள் பெயர், முகவரி மற்றும் அறக்கட்டளையின் நிரந்தர கணக்கு எண் ஆகியவற்றை நீங்கள் ரசீது மூலம் சரிபார்க்க வேண்டும். வருமான வரித்துறை வழங்கிய அறக்கட்டளையின் (trust) பதிவு எண் ரசீதில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். பதிவு எண் செல்லுபடியாகும் கால எல்லைக்குள் வழங்கப்படுகிறது மற்றும் புதுப்பிக்கப்படும் வகையில் வழங்கப்படுகிறது. எனவே, ரசீதில் எதுவரை செல்லுபடியாகும் என்ற காலத்தையும் குறிப்பிட வேண்டும். ஆனால், உணவு, உடைகள் போன்ற நன்கொடைகள் பிரிவு 80 G பிரிவின் கீழ் விலக்குப் பெறத் தகுதியற்றவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
1 Comment
Hi sir , Happy to see the money pechu website ,
We need a separate column for
( Equity Investments information ) in Money pechu website & plz share more information about Equity Market sir ,