5 ஜி நெட்வொர்க்குகளை உருவாக்கும் முயற்சியில் மும்மரமாக களமிறங்கம் டாட்டா!
5 ஜி நெட்வொர்க்குகளை உருவாக்கவும், சீன விற்பனையாளர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் டாட்டா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Tata Sons Private Limited) டெலிகாம் கியர் தயாரிப்பாளரான தேஜாஸ் நெட்வொர்க்ஸ் லிமிடெட்டின் (Tejas Networks Limited) 43.35% பங்குகளை ₹1,884 கோடிக்கு வாங்க ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த வணிகத்தில் ₹500 கோடி மதிப்புள்ள பங்குகள் மற்றும் ₹1,350 கோடி மதிப்புள்ள வாரண்டுகள் (warrants) அடங்கும். வாரண்டுகள் முழுமையாக பங்குகளாக மாற்றப்பட்டவுடன் டாட்டாவுக்கு 43.35% பங்குகள் இருக்கும்.டாட்டா சன்ஸ் பங்குகள் மற்றும் வாரண்டுகளை தலா ₹258 க்கு வாங்கும்.
பொதுப் பங்குதாரர்களிடமிருந்து (public shareholders) கூடுதலாக 26% தேஜாஸ் நெட்வொர்க் பங்குகளை வாங்கவும் டாட்டா திட்டமிட்டுள்ளது. இதற்கு மேல், டாட்டா சன்ஸ் தேஜஸின் நான்கு மூத்த நிர்வாகிகளிடமிருந்து ₹34 கோடி மதிப்புள்ள பங்குகளையும் வாங்கும். டாட்டாவின் முதலீடானது, அரசாங்கம் தொலைத்தொடர்பு கியர் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க முயற்சிக்கும் நேரத்தில் வருகிறது. சைபர் தாக்குதல்களைத் (cyber attacks) தடுக்க நம்பகமான நிறுவனங்களில் இருந்து உபகரணங்களை (equipment) வாங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அரசாங்கம் கட்டளையிட்டுள்ளது.
தேஜஸை வாங்குவது மற்றும் வணிகத்தின் வன்பொருள் (hardware) பக்கத்தில் நுழைவது டாட்டாவின் தொலைத்தொடர்பு வணிகத்திற்கான (telecom business) குறிப்பிடத்தக்க மாற்றமாகும், என்று மூத்த தொலைத்தொடர்பு நிபுணர் (telecom expert) மகேஷ் உப்பல் கூறுகிறார்.
தேஜஸ் டாட்டா கொடுக்கும் பணத்தை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (research and development), விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் (sales and marketing), உள்கட்டமைப்பு (infrastructure) மற்றும் அதன் உற்பத்தித் திறனை (manufacturing) மேம்படுத்துதல் போன்றவற்றில் செலவழிக்கும்.
Credits: LiveMint