போஸ்ட் ஆஃபீஸ் சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் வரை இருந்தால் வரி விலக்கு?
உங்களில் பலரிடம் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு இருக்க வாய்ப்பிருக்கிறது. பல வங்கிகளில் சேமிப்பு கணக்கு இருப்பினும் மக்கள் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கை விரும்பக் காரணங்கள் உள்ளன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சேமிப்புக் கணக்கில் வட்டி விகிதம் 2.7% ஆகும். அதே நீங்கள் ஒரு தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் 4% வட்டி விகிதத்தைப் பெறலாம். இருப்பினும், சேமிப்பு வங்கி கணக்கில் சம்பாதித்த வட்டிக்கு ₹10,000 வரை வரி விலக்கு கோரலாம்.
உங்களிடம் ஒரு தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு இருந்தால், ஒரு நிதியாண்டில், ₹3,500 வரை சம்பாதித்த வட்டிக்கு (ஒரு தனிப்பட்ட கணக்கிற்கு) வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஒருவேளை உங்களிடம் கூட்டுக் கணக்கு இருந்தால், ₹7,000 வரை வரி விலக்கு, இருக்கும்.
குறைந்தபட்சம் ₹500 வைப்புத்தொகையுடன் (minimum deposit) ஒரு தபால் அலுவலக சேமிப்புக் கணக்கைத் திறக்க முடியும். தபால் அலுவலக சேமிப்புக் கணக்கின் வட்டி ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதி அல்லது மாதத்தின் கடைசி நாளுக்கு இடையேயான குறைந்தபட்ச இருப்பு (minimum balance) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. நிதியாண்டின் இறுதியில் உங்கள் கணக்கில் ₹500 இல்லை என்றால் ₹100 பிடித்தம் செய்யப்படும் (account maintenance fee). மேலும் தொடர்ந்து உங்கள் கணக்கை நீங்கள் உபயோகிக்காவிட்டாலும் உங்கள் கணக்கு தானாகவே மூடப்படும்.
சிறிய சேமிப்புத் திட்டங்கள் (small savings instruments) சில்லறை முதலீட்டாளர்களிடையே (retail investors) மிகவும் விரும்பப்படும் திட்டங்களில் ஒன்றாகும். ஏனெனில் அவை பொதுவாக வங்கி வைப்பு நிதி அல்லது சேமிப்புக் கணக்குகள் (bank deposits or savings accounts) போன்ற பிற திட்டங்களைக் காட்டிலும் வட்டி விகிதத்தை அதிகமாக வழங்குகின்றன. அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு உள்ளிட்ட சிறிய சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டில் சிறிய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை (interest rate) அரசாங்கம் மாற்றாமல் வைத்திருக்கிறது.