வெளிநாட்டுல குழந்தைங்க இருக்காங்களா? அவங்களுக்கு எவளோ பணம் அனுப்பலாம்? வழிகாட்டும் குறிப்பு !
பலருக்கு வெளிநாடுகளில் படிக்கும் அல்லது வேலை செய்யும் குழந்தைகள் உள்ளனர். சில சமயங்களில், அவர்களுக்கு பண உதவி தேவைப்படலாம். இதுபோன்ற சூழ்நிலையில் உங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு பணத்தை நீங்கள் அனுப்ப முடியும்?
அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்ட விதிகளின்படி (Foreign Exchange Management Act (FEMA) provisions) ஒரு இந்தியக் குடிமகன்மேற்குறிப்பிட்ட தேவைகளுக்காக ஒரு நிதியாண்டில் ₹1.86 கோடி வரை பணம் அனுப்பலாம்.
இந்த வரம்பில் வெளிநாட்டில் ஒரு வங்கிக் கணக்கைத் திறப்பது போன்ற பரிவர்த்தனைகள் அடங்கும். வெளிநாட்டில் சொத்து வாங்குவதற்கான வரம்பும் இந்த எல்லைக்குள் வரும்.
பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், கடன் கருவிகள் (debt instruments) அல்லது தனியார் பங்குகளில் (private equities) முதலீடு செய்வதற்கும் நீங்கள் இந்த வரம்பை பயன்படுத்தலாம். தனிப்பட்ட அல்லது வணிக வருமானங்களுக்கு (personal or business visits) அல்லது பரிசு மற்றும் நன்கொடைகளைத் (gifts and donation) தவிர்த்த வருமானங்களுக்கும், வேறு நாடுகளில் குடிபெயரும்போது (emigration) இது பொருந்தும்.
வெளிநாடுகளில் வாழும் உங்களின் நெருங்கிய உறவினர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்காக அல்லது கல்விச் செல்வுகளுக்காகவும் இந்த வரம்பை பயன்படுத்த முடியும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் Liberalised Remittance Scheme கீழ் வெளிநாடுகளில் கல்வி பயிலும் உங்கள் குழந்தைகளுக்கு $250,000 (₹1.86 கோடி) வரை கட்டணங்கள் ஏதுமின்றி இலவசமாக பணம் அனுப்ப முடியும். நீங்கள் பணம் அனுப்பத் தேர்வு செய்யும் முறைகளைப் பொறுத்து சில பரிமாற்றக் கட்டணங்களில் (transaction charges) மாற்றங்கள் இருக்கலாம்.
ஒருவேளை நீங்கள் ஆன்லைன் பரிமாற்றம் செய்ய விரும்பினால், அதாவது வங்கியின் இணைய சேவை (internet banking) அல்லது வேறு ஒரு வணிக ஊடகத்தின் வழியாக (online services), சில வங்கிகள் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் சில வரம்பை நிர்ணயித்திருக்கும். எடுத்துக்காட்டாக மொத்தமாக $25,000 வரை ஒரு முறை அனுப்பலாம். தனிப்பட்ட வங்கிகள் தினசரி அடிப்படையில் மாற்றக்கூடிய தொகைக்கு கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும்.
அதற்கு மேலான தொகையை நீங்கள் பரிமாற்றம் செய்ய விரும்பினால், வங்கிக் கிளைக்கு சென்று வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் படிவத்தை நிரப்பி அதோடு சில அடையாளச் சான்றுகளை / ஆவணங்களை இணைக்க வேண்டும்.