என்னது! இட்லி-தோசை மாவு விலையும் ஏறப்போகுதா? சிறுதானியங்களையும் விட்டு வைக்கலையா இந்த GST கவுன்சில்!
சமைக்கத் தயார் நிலையில் இருக்கும் இட்லி தோசை மாவைப் பொடியாக விற்றால் 18 சதவீதம் GST (சரக்கு மற்றும் சேவை வரி) அதையே மாவாக விற்றால் 5 சதவீதம் GST. இதை எதிர்த்து கிருஷ்ணா பவன் உணவுகள் மற்றும் இனிப்புகள் (Krishna Bhavan Foods and Sweets) Advance Decision Authority அமைப்பின் தமிழக அமர்வில் மேல்முறையீடு செய்தது.
இட்லி தோசை மட்டுமல்ல… கிருஷ்ணா பவன் உணவுகள் மற்றும் இனிப்பு நிறுவனம், தினை, கம்பு, ராகி மற்றும் மல்டி கிரெயின் மாவுக் கலவை போன்ற 49 பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி விகிதத்தைக் குறைக்கக் கோரி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. பெரும்பாலும் கிருஷ்ணா பவன் உணவுகள் தூள் வடிவத்தில் உள்ளன.
ஆனால் இந்த மேல்முறையீடு அந்த நிறுவனத்திற்கு சாதகமாக அமையவில்லை. மனுவை விசாரித்த அமர்வு, கிருஷ்ணா நிறுவனம் விற்பனை செய்யும் பொருட்கள், தூள் வடிவில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், எனவே 18% ஜி.எஸ்.டியே பொருந்தும் என்று கூறி, அந்த நிறுவனத்துக்கு ஏமாற்றம் அளித்தது.
தூளாக விற்றால் ஒரு GST, மாவாக விற்றால் இன்னொரு கணக்கு என்பது பிரச்சைனைகளை ஏற்படுத்தம் என்று EY (Ernst & Young) வரி பங்குதாரர் அபிஷேக் ஜெயின் கூறுகிறார். இதனால், தூளாக விற்கப்படும் இட்லி தோசையின் விலை அதிகரிக்க வாய்ய்புண்டு! சிறுதானியங்களும் தான்! எல்லாம் விற்கப்படும் வடிவத்தைப் பொறுத்து.