மளிகை சாமான் டெலிவரியில் புதிய யுத்தியைக் கடைபிடிக்கும் அமேசான்? மக்களைக் கவருமா?
மளிகை சாமான் வாங்கணுமா? அமேசான்ல ஆர்டர் பண்ணி மோர் சூப்பர்மார்கெட்ல போய் அத பிக்-அப் பண்ணிக்கலாம். டாடாவுக்குச் சொந்தமான பிக்பாஸ்கெட், வால்மார்ட்டுக்குச் சொந்தமான பிளிப்கார்ட், க்ரோஃபர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஜியோமார்ட் ஆகியவற்றுக்கு இடையே இ-மளிகை சந்தையில் கடும் போட்டி நிலவும் நேரத்தில் இது வருகிறது.
இந்த சேவை தற்போது பெங்களூரில் உள்ளது. ஆனால் இப்போதைக்கு கேஷ்-ஆன்-டெலிவரி இல்லை. ஆதித்ய பிர்லா குழுமத்திடமிருந்து மோர் சூப்பர் மார்க்கெட்டை 2019ல் கைப்பற்றியது அமேசான். “இந்த மாதிரி ஆர்டர் அண்ட் டெலிவரி வெளிநாட்டுல சகஜம். நம்ம நாட்ல எப்படி வேலை செய்யுதுனு பார்ப்போம்” என்கிறார்கள் வல்லுநர்கள்.
மக்கள் எப்பொழுதும் வீட்டு வாசலில் மளிகை சாமான் வரணும்னு ஆசைப்படுவாங்க. ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிட்டு போய் பிக்-அப் பண்ற சேவை சரியா வருமான்னு பார்க்கணும் என்று அந்த வல்லுநர் மேலும் கூறுகிறார். அமேசான் ஃப்ரெஷில், வாடிக்கையாளர்கள் இரண்டு மணி நேர விநியோகத்தை தேர்வு செய்யலாம் அல்லது காலை 6:00 மணி முதல் நள்ளிரவு வரை வசதியான இரண்டு வசதியான நேரத்தைத் தேர்வு செய்து உங்கள் ஆர்டர்ரை கடைக்கு சென்று பிக்-அப் செய்யலாம்.
600 ரூபாய்க்கு மேல் வாங்கினால், டெலிவரி பிரீ. இதற்கு கிழே, ஆர்டர் செய்தால், ₹29 டெலிவரிக் கட்டணம் அளிக்க வேண்டும். இப்போதைக்கு, பெங்களூரில் அமேசான் ஃப்ரெஷ் ஸ்டோர் பிக்-அப்கள் இலவசம். அமேசான், பிரைம் உபயோகிப்பவர்களிடம் முழு உணவு விநியோகத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்தது.
நிறைய பேர் ஆன்லைனில் வீட்டுக்குப் பயன்படும் பொருட்களை ஆர்டர் செய்வதால் , டெலிவரி டைம் கூடுதலாக இருக்கிறது. பிக்பாஸ்கெட், க்ரோஃபர்ஸ் மற்றும் பிளிப்கார்ட் எக்ஸ்பிரஸ் டெலிவரியினை வழங்க போட்டியிடுகின்றன . ஸ்விக்கியும் டன்ஸோவும் இதில் அடக்கம். மளிகை சாமான் டெலிவெரியில் போட்டியோ போட்டி. அமேசானின் புதிய திட்டம் மக்கள் மனங்களைக் கவருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.