மாருதியை மிரள வைத்த “அடேய் கொரானா”
மாருதி சுசுகி நிறுவனம் கடந்த 20 வருஷத்துல இல்லாத சிக்கல்ல இருக்குங்க. மூணாவது வருஷமா அதோட தயாரிப்பு கொறஞ்சது மட்டுமில்லங்க, 11 வருஷத்துல இந்த வருஷம் தான் தயாரிப்பு படுபாதாளத்துல வீழ்ந்திருக்கு. வியாபாரமும் 15 ஆவது நிதியாண்டுக்குப் பிறகு இப்பத்தான் பெரிய வீழ்ச்சியடைஞ்சிருக்கு. எல்லாம் “அடேய் கொரானா” எபெக்ட் தான், வேறென்ன?
போன நிதியாண்டுல (FY20) மாருதி சுசுகி 10,08,000 வாகனங்களைத் தயாரித்தது. FY19 ல இது 10,17,000 ஆ இருந்தது. ஆல் டைம் ஹையா இருந்த FY18 ல கம்பெனி தயாரிச்ச வண்டிகளோட எண்ணிக்கை 10,62,000. கம்பெனியோட நெட் சேல்ஸ் ரெண்டாவது வருஷமா கொறஞ்சிருக்கு. அதே மாதிரி நிகர லாபமும் மூணாவது வருஷமா இறங்குமுகம் தான். கடந்த 20 வருஷத்துல இப்பத்தான் கம்பெனி முதல்முறையா நஷ்டத்துல ஓடுது.
கம்பெனியோட வரவு செலவுப் புத்தகத்துல 1999 ஆம் வருஷத்துல (FY99) இருந்து பாத்தா ரெண்டு தடவ தாங்க நெட் சேல்ஸ் இறங்கி இருக்கு. மொதல்ல FY01 அப்பறமா FY 12. இதுல என்னாச்சுன்னா, கம்பெனியோட நிதி விகிதங்கள் குறைந்து கிட்டத்தட்ட 20 வருஷத்துல முதல் முறையா மாருதி அதனுடைய குறைந்த அளவை எட்டியிருக்கு. FY 21 இல் அடிப்படை மூலதனத்தின் மீதான வருமானத்தில் 10.1 % குறைஞ்சிருக்கு, இது FY 20 ல 14.3 % சதவிகிதம், சமீப காலங்களில் அதனுடைய அதிகபட்ச அளவு 29 %, இது FY 17 இல், அதேமாதிரி பங்குகளின் மீதான இந்த நிறுவனத்தோட வருமானம் 8.6 % ஆகக் குறைஞ்சிருக்கு, இது FY 20 ல 11.8 %, அதே FY 17 இல் இந்த வருமானம் அதிகபட்சமாக 22.2 %.ஆக இருந்தது.
மாருதி சுசுகி ஒட்டுமொத்தமா 10,46,000 கார்களை கடந்த நிதியாண்டில் (FY 21) வித்திருக்கு. இது ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டின்படி 6.7 % இறங்குமுகம், FY 17 ல இருந்து இதுதான் குறைந்த அளவு. 30,000 லைட் கமர்ஷியல் வாகனங்களையும் உள்ளடக்கியது இது. இந்த வகை வாகனங்களைத் தவிர்த்துப் பாத்தா 10,43,000 வாகனங்கள் என்பது FY 15 துவங்கி இதுதான் மிகக்குறைந்த அளவு. அந்த ஆண்டில் 10,29,000 வாகனங்களை மாருதி சுசுகி விற்றிருந்தது.
குஜராத்தில் இருக்கிற தாய் நிறுவனமான சுசுகி மோட்டார் தனக்குச் சொந்தமான உற்பத்திப் பிரிவிலிருந்து விற்பனை ஆகக் கூடிய அளவின் கணிசமான பகுதியை நிறுவனம் இப்ப அவுட்சோர்ஸ் செய்யுறதுனால, வாகன உற்பத்தியில் சரிவு ரொம்பக் கூர்மையானதாப் பார்க்கப்படுகிறது. சொந்த உற்பத்தியில் மட்டுமே FY21 இல் மொத்த விற்பனை அளவில் 74 சதவீதமாக இருந்தது. இது FY20 இல் 75 % மற்றும் FY19 இல் 84 % ஆக குறைந்தது. சுசுகி மோட்டார் குஜராத் இப்போது அதன் உற்பத்தி திறனை 750,000 யூனிட்டுகளாக உயர்த்தி இருக்குறதுனால, இது இன்னும் குறைய வாய்ப்பு இருக்கு. இது மாருதி சுசுகியின் சொந்த உற்பத்தி திறனில் கிட்டத்தட்ட பாதிக்கு சமம்.
இந்தியாவில் கார் விற்பனைக்கு இருக்குற கட்டமைப்பு ரொம்ப மந்தமா இருக்குறதுனால வியாபாரம் படுத்துருச்சுன்னு கம்பெனி குற்றம் சாட்டியது. சொன்ன மாதிரி, போன பத்து வருஷத்துல கார் விற்பனையின் வளர்ச்சி விகிதம் கொஞ்சம் கொஞ்சமா குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம் தான். 2010-2015 காலகட்டத்தில், இந்தியாவில் கார் விற்பனையின் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் 12.9 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதமாக் கொறஞ்சிருக்கு. அடுத்த அஞ்சு வருஷத்துல வளர்ச்சி விகிதம் மேலும் 1.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்று நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா கூறினார்.
FY21 க்கான வருடாந்திர அறிக்கையில் பங்குதாரர்களுக்கு பார்கவா இந்த மாதிரி ஒரு தகவல் அளித்திருக்கிறார். கடந்த 20 வருஷத்துல பயணிகளுக்கான வாகனங்களின் தேவைகளும் பெரிய அளவில் குறைந்து வருவதும் கொஞ்சம் கவலைக்குரிய விஷயம் தான். இங்கேயும் “அடேய் கொரானா” எபெக்ட் தாங்க. போன வருஷத்தோட, FY21 ஆண்டறிக்கைல இந்த நிலைமை கொஞ்சம் முன்னேற்றம் அடைந்திருப்பதாக கம்பெனி சொல்லுது.
இந்த வீழ்ச்சி எதனால் ஏற்பட்டதுங்குற கேள்விக்கு பார்கவா என்ன சொல்றார்னு பார்ப்போம், “கார் வாங்குறவங்களோட சுமை பல மடங்கு அதிகரிச்சிருக்கு. ரெகுலேட்டரி மாற்றங்கள், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி, மூலப்பொருட்களின் விலையில் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வு, செலுத்த வேண்டிய வரிகளின் உயர்வு, கார்கள் மீது விதிக்கப்டும் GST வரி. வேற பெரிய நாடுகளை ஒப்பிடும்போது இந்த வரிவிகிதங்கள் ரொம்பவே அதிகம்.”
இந்த நிதியாண்டு மாருதி சுசுகிக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். கடந்த 5 வருஷத்துல இந்த நிதியாண்டின் முதல் காலாண்டுதான் ரொம்பக் குறைவான சேல்ஸ். 9 வருஷத்துல இப்பத்தான் மிகக்குறைந்த நிகர லாபம். இதுல FY 21 சேர்க்கப்படலைங்க, ஏன்னா நாடு முழுவதும் முழு அடைப்பு அமலில் இருந்த காலம் அது. ஆனா, பொருளாதார வல்லுநர்கள் இன்னும் மாருதி மீது நம்பிக்கையோடு இருக்காங்க. முழு அடைப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையில் பணவீக்கம் அது இதுன்னு பல காரணிகள் இருந்தும் மாருதியின் FY 22 நம்பிக்கையளிக்கும் என்று மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்விசஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.
எம்.கே குளோபல் பைனான்சியல் சர்விசஸ் நிறுவன ஆய்வாளர்கள் கூறுகையில், “மாருதி சுசுகி மீது நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். வியாபாரம்கிறது இப்படித்தான். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு ஏற்ற இறக்கங்களை சந்திக்கும், புதிய ஆர்டர்கள், வளரும் தேவைகள், மீளும் பொருளாதாரம், புதிய தயாரிப்புகள் எல்லாம் சேந்து இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமா மாறும்” ங்குறாங்க.
மாருதி மட்டுமில்ல, இன்னும் பல கார் தயாரிப்பாளர்களையும் “அடேய் கொரானா” படாத பாடு படுத்தி இருக்கான். ஆனாலும், நம்பிக்கை தானே வாழ்க்கை, கொரானாவைத் தாண்டி வருவோம்ல என்கிறார்கள் பொருளாதார ஆய்வாளர்கள்.