ஆல்பபெட் நிறுவன வருவாய் சரிவு…
ஆல்பபெட் நிறுவன வருவாய் சரிவு
கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் நிறுவனமாக ஆல்பபெட் நிறுவனம் திகழ்கிறது.இந்த நிறுவனத்தின் வருவாய் என்பது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு இதுவரை 9.5%குறைந்திருக்கிறது.
cloud computing துறையில் எதிர்பார்த்ததை விட மிக மிகக் குறைவான வருவாய் வந்ததால் அந்த நிறுவனம் வருங்காலத்தில் போட்டியில் நிற்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
434 மில்லியன் டாலர் தொகை குறிப்பிட்ட துறையில் வருமானமாக வரும் என்று கணிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தொகை வெறும் 266மில்லியன் டாலர்களாக குறைந்திருக்கிறது.
அமேசான்,மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டியில் கூகுள் நிறுவனத்தால் நிற்க முடியவில்லை. இந்தாண்டு முதல் முறையாக லாபத்தை கூகுள் நிறுவனம் பதிவு செய்திருந்தது.
செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூகுளின் கிளவுடு கம்பியூட்டிங்கை பயன்படுத்தியதே இந்த முன்னேற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.ஆனால் அந்த வேகத்தை கூகுளால் தொடர்ந்து அளிக்க இயலவில்லை. இதனால் அடுத்தடுத்த காலாண்டுகளில் தொய்வை சந்தித்துள்ளது.இதனால் சின்ன கேப்பில் மற்ற நிறுவனங்கள் நுழைந்து கூகுளை பின்னுக்கு தள்ளியுள்ளன.
போட்டியில் கூகுள் நிறுவனம் நிற்க வேண்டுமெனில் முதலீடுகள் தேவைப்படுகிறது.ஆனால் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருவதால்,கூகுள் கிளவுடு சர்வீசஸ் நிறுவனத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாகியுள்ளது. இந்தாண்டில் மட்டும் கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சி 57%உயர்ந்திருந்தாலும் இது போதாது என்கிறார்கள் நிபுணர்கள், தேடுதலில் உள்ள விளம்பர வருவாய் 43.2பில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அது 44 பில்லியன் டாலராக வசூலை வாரிக்குவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு நுட்பம் வருகையால் இந்த வருவாய் வருங்காலங்களில் நிலைக்குமா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை தகவமைத்துக்கொள்ள கூகுள் தவறிவிட்டதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் போட்டியாளர்கள் முன்னேற கூகுளே வழி வகுத்துவிட்டதாகவும் நிபுணர்கள் சாடியுள்ளனர்.
யூடியூபின் வருமானம் 7.8பில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அதுவும் 8 பில்லியன் அமெரிக்க டாலர்களை வாரிக் குவித்திருக்கிறது. இந்த நிலையில் ஒரு சில துறைகளில் கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்கள் சறுக்கி வருகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.