ஏத்தர் நிறுவனத்தில் 550 கோடி முதலீடு!!!!
இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் மிகவும் பிரபலமான நிறுவனமாக ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் திகழ்கிறது.இந்த நிறுவனம் ஏதர் நிறுவனத்தில் 550 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு ஹிரோ நிறுவன இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக கடந்த 4ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடந்ததாகவும்,இது தொடர்பாக தேசிய பங்குச்சந்தைகளில் ஆவணங்களை ஹீரோ நிறுவனம் அளித்துள்ளது. ஐபிஓ எனப்படும் ஆரம்ப பங்கு அறிவிப்புக்கு முன்னதாக இந்த முதலீடு நடைபெற இருக்கிறது.அடுத்த ஆண்டு ஏத்தர் நிறுவனம் தனது ஐபிஓவை வெளியிட இருக்கிறது. தங்கள் நிறுவனம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாக கூறியுள்ள ஏதர் நிறுவன அதிகாரிகள் ஐபிஓ தொடங்கி லாபத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக ஏத்தர் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்தாண்டு அக்டோபரில் ஏத்தர் நிறுவனம் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள், கலாடியம் முதலீட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்றது. கடந்த அக்டோபர் நிலவரப்படி 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள்மதிப்பு கொண்டதாக ஏதர் நிறுவனம் இருக்கிறது. கடந்த 2013ஆம் ஆண்டு மேதா மற்றும் ஸ்வப்னில் ஜெயின் ஆகிய இருவரும் சேர்ந்து இந்த நிறுவனத்தை உருவாக்கினர்.இந்த நிறுவனத்தின் ஆலைகள் தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ளன.தற்போது வரை ஆண்டுக்கு 4.2 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் இந்நிறுவனம், ஆண்டுக்கு 15 லட்சம் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 125 சிசி பிரிவில் ஏத்தர் நிறுவனத்தின் 450 எஸ் ரக ஸ்கூட்டர்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 6835 வாகனங்களை ஏத்தர் நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது.