தேசிய பங்குச் சந்தையில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட 6 நிறுவனங்கள் !
புதன் கிழமை தேசிய பங்குச் சந்தை வோடபோன் இந்தியா, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா உள்ளிட்ட ஆறு நிறுவனங்களின் பங்கு வணிகத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சந்தை அளவிலான நிலை வரம்பில் (MWPL), வோடபோன் இந்தியா, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ், எஸ்கார்ட்ஸ் மற்றும் கிரானுவல்ஸ் இந்தியா போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதன் நிலை வரம்பில் 95 சதவீதத்தை தாண்டியதால் எதிர்கால மற்றும் விருப்பங்களின் (F&O) பிரிவில் இந்தப் பங்குகள் தடைசெய்யப்பட்டன. இதனுடன் கூடவே பாரத் ஹெவி எலக்ட்ரிகல் லிமிடெட் நிறுவனமும் அதன் நிலைவரம்பை தாண்டியதால் புதன் கிழமை வர்த்தகத்திற்குத் தடைசெய்யப்பட்டதாக தேசிய பங்குச் சந்தை குறிப்பில் தெரிவிக்கிறது.
“அனைத்து வாடிக்கையாளர்களும், உறுப்பினர்களும் தங்கள் நிலைகளை ஈடுசெய்யும் நிலைகள் மூலம் குறைக்க மட்டுமே கூறப்பட்ட பத்திரங்களின் ஒப்பந்தங்களில் வர்த்தகம் செய்வார்கள் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது,” என்று பங்குச் சந்தை கூறியது.
வர்த்தகத்திற்கான தடையில் உள்ள பத்திரங்களின் பட்டியலை NSE தினமும் புதுப்பிக்கிறது. F&O தடைக் காலத்தின் கீழ் இருக்கும் போது, குறிப்பிட்ட பங்குகளில் எந்த புதிய நிலைகளும் அனுமதிக்கப்படாது.